பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வெற்றி மேல் வெற்றி பெற.

தன்னலம் வெற்றி கொள்ளப்படும் என்பதை மறுப்பு: வர்களுக்கும், அதனைப் பெருமைப்படுத்தித் தன்னலத் திற்கு ஆட்சி அமைப்பவர்களுக்கும் இதனை நான் எழுத வில்லை.

எவன் நம்பிக்கை உள்ளவனோ, அவன் அந்த புனித மான வழியில் செல்வான்,

அவ்வாறு சென்று உயர்வுமிக்க உண்மையை அடைந்து விடுவான்.

அப்படியே நம்புகிறவன், தன்னை அணிமைப்படுத்திக் கொள்ளட்டும்:

நம்பிக்கை எனும் முடியைச் சூட்டிக்கொண்டு, பொறுமை எனும் படை தாங்கியவாறு,

உறுதியான தீர்மானம் எனும் கூரியவாளை ஏந்திச் செல்கிறான்,

தனக்குள்ளேயே உண்மைக்கு எதிராகவுள்ள பகைவர் களைத் தாக்குவநற்கு அணியமாகி விடுவான்;

உண்மைக்கான பயிற்சிகளைத் தொடங்குவான்;

பயிற்சியினால் அத் தொழில் கலைஞன் கைத்திறன் பெறுகிறான்,

பயிற்சியினால் உண்மையை விரும்பும் அவன் உண்மையை நிறைவேற்றும் ஆறறல் பெறுகிறான்.

உண்மையின் வழி மூன்று பயிற்சிகளினால் குறிக்கப் பட்டுள்ளது

முதலாவது, தன்னைத்தான்ே அடக்குவது,

இரண்டாவது, தன்னைத் தான்ே ஆய்வு செய்வது,

மூன்றாவது, தன்னைத் தன்னிடமே புகலடைய வைப்பது.