32 வெற்றிமேல் வெற்றி பெற...
கொடிய போரிலிருந்து;
குழப்பத்திலிருந்தும், முரண்பாடுகளிலிருந்தும் மீட்கப் பட்டவர்கள் வந்துள்ளனர்;
அவர்கள் இப்போது பேரொளியில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்;
அவர்கள் அமைதியுடனும், உறுதியுடனும் நிற்பதனால் இருளும் இடர்களும் இனிமேல் அவர்களுக்கு இல்லை.
4
மீட்கப்படாதவர்கள் தன்னலத்தின் எல்லைகளுக்கு உள்ளேயே தங்குகிறார்கள்;
இருளினால் அவர்கள் கட்டுப்பட்டுள்ளனர்; அவர்கள் நாடுவது தன்னலத்தை மட்டுமே.
இந்தப் புடிவியில் யாருக்கும் தெரியாத உருவம் அற்றவரின் மேன்மையிலே மீட்கப்பட்டவர்கள் உள்ளனர்;
அவர்கள் ஒளியினால் வளைக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் நாடுவது எல்லோரின் நலனே. பிணைப்புகளை உடைத்து எறிய 'வல்லது உண்மை; ;அடிமைகளுக்கு விடுதலையை வழங்குகிறது ويراعي அவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கிறது.
விடுதலையை விட்டு அடிமைத்தளையை யார் தெரிந்து எடுப்பார்கள்!
ஒளிக்கு மாற்றாக இருளை யார் விரும்புவார்கள்!