பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 89

உள்ளேயுள்ள நம் பகைவன் தோற்கடிக்கப்பட்டதும் வெளியே இருந்த பகைவர்கள் எல்லோரும் ஒடி மறைந்து விட்டனர்.

இனிமேல் பகைமை இல்லை. மனிதர்களும் உரிய பொருள்களும் இடங்களில் உள்ளனர்; உள்ளன.

இனிமேல் கலகம் இல்லை. சண்டை இல்லை; போர் இல்லை.

சச்சரவை நாம் உற்று நோக்குகின்றோம், ஆனால் அதில் ஈடுபடுவது இல்லை;

குழப்பத்தின் ஒலியைக் கேட்கின்றோம், இருந்தும் நாம் எவ்வித முழக்கமும் இடுவதில்லை.

ஆனால், ஒசைப்படாமல் நின்று நாம் அதைப் பார்க் கிறோம்.

பேசாமல் இருந்தாலும் நாம் புறக்கணிப்பதில்லை. தெய்வீகக் கட்டளையை உணரும்போது, எல்லாவற். றுடனும் நாம் இணக்கமாகின்றோம்; அவ்வாறு இணக்க மானதும், நாம் நிறைவான அமைதியில் உள்ளோம்.

3

ஆகவே, நாம் துன்பப்பட்டுப் புலம்பி அழவேண்டுமா?

அவ்வாறு புலம்பி அழுவதற்குற்ற காரணம்தான்் கரைந்து போய்விட்டதே;

துல்பரத்தின் அடித்தளம் வெட்டி வீசப்பட்டது.

தீவினையும் தீமையும் முன்னர் இருந்தன, ஆனால் இப்போது அவை இல்லை.