பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வெற்றி மேல் வெற்றி பெற...

கருத்து மாறுபாடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. எதைப்பற்றி நாம் நிறைவு அடைவது? பிளவுபட்ட உலகம் அழிக்கப்பட்டது. நாம் எதிர்ப்பதற்கு என்ன உள்ளது? நாங்கள் வழக்காடுவதும், ஆவலாகவும் அக்கறையாக வுள்ளதுமான உண்மை தோல்வி அடையுமா?

உண்மைக்கு எப்போதும் பொறுத்துக் கொள்ளும் தன்மை இருப்பதனால் நம் அமைதி ஒருபோதும் தோல்வி அடையாது.

விதை, அதற்குரிய இடத்திலிருந்து தவறிப் போகிறது: மலர்கள் தோன்றுகின்றன, பழமும் அதன் பருவ காலத்தில் பழுக்கிறது.

பகல் குடாக்குகிறது, இரவு குளிராக்குகிறது;

ஒளி எங்கும் பரவுகிறது, மழை பெய்கிறது;

பனி மூடுகிறது, உறைபனி எல்லாவற்றையும் பிடித்துக் கொள்கிறது.

இவை எல்லாம் எதிர்க்கப்படுகின்றனவா? இவை எல்லாம் பகைவர்களா? - அவை யாவும் ஒன்றாய்ச் செயல்படுகின்றன. அப்படியானால் நம்மைக் கடுஞ்சினத்திற்குத் துண்டு வது யார்?

சுருக்குபவர்களின் பட்டியலில் எங்களை இணைத்துக் கொள்வது யார்?

நாம் நட்புறவுடன் உள்ளோம் என்பதை எங்களுடன் ஒத்துக் கொள்பவர்கள் யார்?

எங்களை எதிர்ப்பவர்களுடன் நாம் நட்புறவுடன் உள்ளோம்.