பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த, கோவேந்தன் 63

ஆனால், என்னிடம் சோர்வே இல்லை.

சோர்வும் துன்பமும் என்றன் இருப்பிடத்திற்கு வர

முடியாது.

என் இருப்பிடம் தூய்மையான நெஞ்சம்.

நேர்மை மிக்க மனமே எனது ஆலயம்,

குற்றமற்றவர்களின் வாழ்வே புனிதமான எனது உறைவிடம்.

மாணவன் : உங்கள் இருப்பிடத்தில், உங்கள் ஆல் யத்தில்;

உங்களைத் தஞ்சம் அடைகின்றேன்.

ஆம்! உங்கள் புனித உறைவிடத்திலும்தான்்.

ஆசான் : தூய்மையான நெஞ்சத்தில் ஆசைக் கறைப் படிவதில்லை;

நேர்மையான மனம், வெறி உணர்ச்சியினால் தூண்டப்

படுவதில்லை.

குற்றமற்ற வாழ்வில் தன்னலம் பற்றிய எண்ணமே இல்லை;

உனது நெஞ்சத்தைத் தேடிப் பார்த்து உண்மையைப் பின்தொடர்வாய்.

ஆசை, வெறி உணர்வு, தற்புகழ்ச்சி இவற்றிற்கான தன் ன லத்தை விலக்கி வை.

அவற்றை மறு; வெற்றி பெறு; விட்டுவிடு.

அவற்றின் சாயலோ, ஒரு சிறு பகுதியோ உன்னுடன் இருக்கவே கூடாது,

ஏனெனில், எல்லாத் தடுமாற்றங்களுக்கும் அவையே பொறுப்பானவை.