பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 67

அதனால், நான் உறுதியாக நடக்க வேண்டும் என்று: நினைக்கும் போதெல்லாம் தடுக்குண்டு வீழ்கின்றேன்;

ஆம்! நான் பலமுறை அப்படி விழுந்து பலமாகப் புண் பட்டுள்ளேன்.

ஒ தலைவனே! அந்த இருளானது நீங்குமா?

இந்த முயற்சி வெற்றியில் முடியுமா? மிகுதியான என் துயரங்களுக்கு முடிவுண்டா? ஆசான் ! உனது உள்ளம் தூய்மையாக இருந்தால் இருள் நீங்கிவிடும்;

தீவிரமான, கொடிய ஆசைகளிலிருந்து உனது மனம் விடுபடும்போது, நீ முயற்சியின் முடிவை அடைவாய்.

தன்னலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அழியும்போது, துயரத்துக்கான ஏது எதுவுமே இருக்காது.

கட்டுப்பாடான ஒழுங்கு முறைகளுக்கும் தூய்மைக்கும் வழிகாட்டும் வழியில் நடக்கின்றாய்;

என் எல்லாத் தொண்டர்களும் அதே வழியில்தான்் நடந்து செல்ல வேண்டும்.

அறிவொளிக்குள் நுழையும் முன்னரும், உண்மையின் முழுமையான புகழைப் பெறு முன்னரும், தூய்மை அற்ற எல்லாமே அகற்றப்பட வேண்டும். பொய்மாயத் தோற்றங்கள் யாவும் விரட்டப்பட ங்ேகண்டும்;

உனது மனம் என்னும் கோட்டைக்குள் தீயவை புகாத, வாறு முயற்சியெனும் அரண் அமைக்க வேண்டும்.