பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வெற்றி மேல் வெற்றி பெற...

இருள் உன்னைச் சுற்றி வளைத்துக் கொண்ட போதிலும்,

ஒவ்வொரு செயலிலும் தீய கவர்ச்சி வந்து உன்னைத் தாக்கிக் கொண்டாலும்,

உனக்கு வெளிப்படையாகவே உனது புண்கள் உன்னைத் துன்பப்படுத்தினாலும்,

உண்மையின் மேல் நீ வைத்திருக்கும் நம்பிக்கையை தளர்த்தாதே;

நானே உண்மைக்கு இறைவன்; உன்னை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைவில் கொள், மறந்துவிடாதே.

மாணவன் : உண்மையின்மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையோ மிகவும் ஆற்றல் வாய்ந்தது.

அதனால், நான் மறக்கமாட்டேன், உம்மையே நினைத்துக் கொண்டிருப்பேன்.

ஆசான் : கட்டுப்பா டான, ஒழுங்கு முறைக்கும் தூய் மைக்கும் கொண்டு செல்லும் வழியில் உண்மையாகவே நடந்து செல்லல்.

அதனைப் புறக்கணிக்காமலும் விட்டு விடாமலும் உன்னால் ஒழிக்கப்பட்ட இன்பங்களை நுகர வேண்டும் என்று நினைத்துக் காத்திருக்காமை;

இவை போன்ற உனக்குத் தேவையானவற்றைக் கற்று அறிந்து கொள்வாய்.

பழிகளின் தன்மையையும் தீய கவர்ச்சியின் பொரு ளையும்;

துன்பத்தின், துயரத்தின் காரணங்களையும் அவற்றி னின்றும் விடுபடுவதற்கான மருந்தையும்;