பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 31

செல்வத்திலும் வறுமையிலும் ஒரே நிலையாக இருப் பவன்;

வினை முடிவிலோ வினைகள் (செயல்கள்) கைக் கூடாத நிலையிலோ,

வாழ்விலோ தாழ்விலோ தன் எண்ணங்களை வாழ்வில் கொள்ளாதவன்;

என்றும் நிலைத்திருக்க விரும்பாதவன்;

ஆம்! அவனே எனது தூய்மையான நிலையைப் பெற்றவனாகிறான்.

அவனின் மகிழ்வின்பம் நிலைக்கிறது;

அவனுக்கு ஆறுதல் கிடைப்பது உறுதி;

அவனது அமைதி கெடுவதில்லை;

தூய்மை எதனால் ஆக்கப்பட்டது என்பதை அவன் அறிவான்;

உண்மையின் கறையற்ற தன்மையை அவன் புரிந்து கொள்கிறான்.

மாணவன் : உண்மையைத் துப்பரவு செய்வதுடன்

எனது உள்ளத்தையும் துபபரவு செய்வேன்;

நீர் தூய்மையாக இருப்பதைப்போல் நானும் தூய்மை யாகவே இருப்பேன்;

இன்ப எண்ணங்களை ஒழித்து விடுவேன்; அழியும் பொருள்களில் அவாக் கொள்ள மாட்டேன்;

எனலு தோற்றத்தைச் சிறப்பில்லாத ஒன்றாகவே கருதுவேன்;