பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு ? களைச் சிறிது தூரத்தில் கண்டதும் அவற்றைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. உடன் வந்த நண்பர்களுடன் அங்கு GLTGశాr. அங்கு என்ன கண்டேன் ? பத்து அடி நீளம், ஐந்து அடி அகலமுள்ள குடில் இடையில் ஒரு சுவர். சுவர் குறுக்கே நின்றதால், குடில் இரண்டு அறைகளாக விளங் கியது. சுவரின் உயரம் மூன்று அடி இருக்கும். ஒலேக் கூரை. ஓர் அறைக்குப் பனையோலைக் கதவு. மற்றதற்குக் கதவுமில்லை, வாசலுமில்லை. இந்த அரண்மனை யாருடையது ? இந்த இரண்டு அறைகளில் ஒன்று பன்றிக் குறவனுடைய வீடு; மற்றென்று அவனுடைய அந்தப் பவித்திரமான மிருகத்தின் மாளிகை. ஒன்று குடில்தான் - மற்றது மாளிகைதான் - சந்தேகமில்லை. குடிலுக்குள் நுழைந்தேன். ஐக்தரை அடி மனிதன் இரண்டரை அடியாகக் குறுகியே உள்ளே துழைய இயலும். அந்த ஐந்தடிச் சவுக்கத்தில் ஒரு பக்கம் அடுப்பு. அதன் அருகில் சட்டி பானே கள். மற்ருெரு பக்கம் மற்றத் தட்டுமுட்டு சாமான் கள். இவை எவை என்று வர்ணிக்கவேண்டுமா ? மாளிகைக்குள் நுழைந்தேன். அங்கே அடுப் பில்லை. பானே பண்டங்கள் இல்லை. தட்டவும் முட்டவும் சாமான்கள் இல்லை. இப்பொழுது யார் 102