பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு ? இப்படி சப்தமில்லாமலும், இவ்வளவு விரை வாகவும் ஓடுவதானல் - அது ஒடுகிற ரஸ்தா எப்படிப் பட்டதோ என்று நினைக்கலாம். ஆகா, இப்பொழுது தான் அறிந்தேன். எனது வாகனத்தைக் கார் என்று அழைப்பது தவறு. கார் என்ருல் அது ஒட ரஸ்தா வேண்டுமே! எனது வாகனம் எந்த ரஸ்தாவி லும் ஓடவில்லை. அந்த ரத்தில் அல்லவோ பிர யாணம் செய்கிறது அகல்ை அதைக் கார் என்று அழையாமல் ஆகாய விமானம் என்று அழைக்க லாம் அல்லவா ? - ஆனல் அப்படிச் சொல்வதும் தவருக முடியும். ஆகாய விமானம் ஆகாயத்தில் - காற்றில் - அல் லவோ பறக்கும்! என்னுடைய வாகனம் விரைந்து பறக்கும் வழியில் காற்று என்பதே கிடையாது. உலகில் காற்று இல்லாத இடம் உண்டோ ? கிடை யாது. ஆனல் என் வாகனம் காற்றில்லாத வெட்ட வெளியில்தான் செல்கிறது. இது மிக அற்புத மல்லவா ? என் வாகனம் - முன் போல் கார் என்று சொல்வதற்கில்லே - என் வாகனம் மணிக்கு எழுபதி யிைரம் மைல் வீதம் இடைவிடாது ஓடிக்கொண் டிருக்கிறது என்று கூறினேன். அது மட்டு மன்று. அந்தரத்தில் அவ்விதம் போகும் பொழுதே அது கறங்கு போல் மேலும் கீழுமாய்ச் சுழன்று கொண்டே செல்லும். அப்படிச் சுழல்வதும் 18