பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்குரி ஜனங்கள் மனத்தில் ராஜத்துவேஷம் ஜனித்துவிடு மல்லவா? ஜனங்கள் கிளம்பிவிட்டால் அரசருக் குப் புகலிடம் ஏது? பழைய மன்னரைத் தலை யிழக்கச் செய்த ஆலிவர் கிராம்வெல் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களில் ஒருவரல்லரோ ஆண்ட்ரூ மார்வெலும் ? இங்ங்ணம் யோசித்து ஒரு நாள் சார்லஸ் அர சர் தம் பிரதான மந்திரி டான்பி பிரபுவை அழைத்து, மார்வெல் எழுதுவதைப் பொறுக்க முடியவில்லை. அவரை அடக்கிவிட வேண்டுமே, அதற்கு வழி என்ன? நீர் என்ன செய்வீரோ, அறியேன். எப்படியாவது அவரை நம் வசப்படுத்தி விடவேண்டும் என்று முறையிட்டுக்கொண்டார். மார்வெஜல ஊமையாக்கி விடுவதில் அரசருக்குள்ள அக்கரை அமைச்சருக்கும் உண்டு. அரசன் அனுமதி அளித்துவிட்டதால் டான்பி’ பிரபு ஆனந்தமாய் மார்வெல் வீட்டைத் தேடிப் புறப்பட்டார். ஆனல் அவருக்குக் கவிஞர் வசித்து வந்த வீடு இருக்குமிடம் தெரியாது. மார்வெல் என்ன மாளிகையில் வாழ முடியுமோ? அவர் பரம தரித் திரர். பாடகர் நிலைமை எந்தக் காலத்திலும் அப் படித்தானே. அதோடு அவர் ஜனங்கள் சார்பாய் கின்றவர். சர்க்கார் தயவு பெருதவர். அதனல் அவர், ஹல் நகரத்திற்குப் பிரதிநிதியா யிருந்த 48