பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 100


கோபம், கொடுமை இவையனைத்தும் மிகவும் மலிந்து கிடப்பதையும் ஒருவன் காணுகின்றான். கடினமான இக்குணங்கள் அவற்றிற்குரிய துன்பங்களையும் கொணருகின்றன. தம் வாணிபத்திலோ குறிப்பிட்ட பணியிலோ, முழுக்க முழுக்கத் தமது கடினமான மனநிலை காரணமாகவே தோல்வியடையவர் இருந்து வருகின்றனர். சீற்றமும், சினமும் கொண்ட மனிதனோ, தன் நெஞ்சத்தில் கடுமையும், தண்மையும், தன்னலச் சூழ்ச்சியும் கொண்டு இரக்கத்தின் ஊற்றுக் கண்கள் வற்றிவிட்டவனாக இருப்பவனோ, பிற வகையில் திறமை வாய்ந்த மனிதனாக இருப்பினும்கூட, முடிவில் தன் காரியங்களில் அழிவைத் தவிர்ப்பது அரிதாகும். ஒரு நிகழ்ச்சியில் சினந் தோய்ந்த மடமையும், மற்றொன்றில் தண்ணிய கொடுமையும் அவன் காட்டுகின்ற நிலை, அவனுடைய தோழர்களிடமிருந்தும், அவனது தொழிலோடு நெருங்கிய தொடர்புடையோரிடமிருந்தும் அவனைப் படிப் படியாகத் தனித்து ஒதுக்கிவிடும். எனவே, தன்னந் தனியான தோல்வியுடன், ஒருவேளை நம்பிக்கையற்ற மனமுறிவுடன் அவனை விட்டு விட்டு ஆக்கக் கூறுகள் அவன் வாழ்வினின்றும் விட்டொழிந்து விடும்.

எந்த ஒரு வாணிபத் தொடர்புகளில் கூட இரக்கம் ஒரு சிறப்பான ஆக்கக் கூறாகும். ஏனெனில், கடுமையும், தடைகூறும் இயல்பும் கொண்டோரைவிட அன்பும், மகிழ்ச்சியான இயல்பும் கொண்டவருடனேயே, தொடர்வு கொள்ள மக்கள் விரும்பி அவர்களிடம் ஈடுபாடு கொள்கின்றனர். நேரடியாகத் தாமே தொடர்வு கொள்ளும் துறைகள் அனைத்திலும், நடுத்தரமான திறமையுடன்