பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

ஜேம்ஸ் ஆலன்


கண்டிப்பான கணித விதிக்குட் பட்டதாயிருப்பதைக் காணும்போது, ஒருவன் தன் செயல்களை நிலைபெற்ற முறைகளுடன் ஒழுங்குபடுத்திக் கொள்வது மூலமாகவே நிகழ்ச்சிகளின் உறுதியற்ற நிலை, வாழ்வின் கீழ்ப்படியாத கொந்தளிப்புகள் ஆகியவற்றின் இடையிலேயும் நிறைவான உறுதிப்பாடு, நிறைவான பாதுகாப்பு, நிறைவான அமைதி ஆகியவற்றைப் பெற முடியுமென்பதைக் கற்பித்து அறிவொளியூட்டும் ஒரு அறநெறி கதையாகவே அறிவுடையோர்க்குத் தென்படுகின்றது.

மனிதன் கட்டுகின்ற வீடோ தூக்கணாங்குருவிக் கூட்டைக் காட்டிலும் மிகவும் அதிகமான சிக்கலுடைய கட்டுமானமாகும்; எனினும், அது இயற்கையில் எங்கணும் தெளிவுபடக் காணக்கிடக்கின்ற கணிதப் படியான முறைகளுடன் கட்டப்படுகின்றது. வடிவ இயல் விழுக்காடுகளுக்கு எதிராக ஒரு கட்டிடத்தை எழுப்ப அவன் என்றுமே முயலுவதில்லை; ஏனெனின், அத்தகைய கட்டிடம் நிலையற்றது என்பதும், கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கையிலேயே அவன் காதுகளில் ஒலிக்கும் வண்ணம் அது இடிந்து விழவில்லை என்றாலும், முதன் முதலாக வீசும் பெருங்காற்று பெரும்பாலும் அதைத் தரைமட்டமாக்கி விடுமென்பதும் அவனுக்குத் தெரியும். கட்டிடத்தை எழுப்புவதில் வட்டம், சதுரம், கோணம் ஆகியவற்றை மனிதன் சிற்றிழையும் தவறாது பின்பற்றுகின்றான்; அதோடு, கடுமையான புயற்காற்றுகளையும் தடுத்துத்