பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

8



நான் இதை எழுதும் போது என் படிப்பறையின் பலகணிவழியே பார்வையைத் திருப்புகின்றேன்; அங்கு முந்நூறு அடிக்கு அப்பால் உயர்ந்து வளர்ந்த ஒரு மரம் உளது. அருகிலுள்ள புதர்க் காட்டினின்றும் வந்த காகமொன்று அம்மர உச்சியில் தனது கூட்டை முதல்முறையாகக் கட்டி முடித்திருக்கின்றது. ஒரு கடுமையான வடகிழக்குக் காற்று வீசுகின்றது. கடுங்காற்று தொடங்கிவிட்டதன் காரணமாக மரத்தின் உச்சி முன்னும், பின்னுமாய் வேகமாக அசைகின்றது; எனினும், மரச்சுள்ளிகளாலும் பன்னாடையாலும் அமையப் பெற்ற வலுவற்ற அக் கூட்டிற்கு எவ்வித இடரும் இல்லை; அதோடு, தன் முட்டைகளின் மீதமர்ந்து கொண்டிருக்கும் அத் தாய்ப்பறவைக்குப் புயலைக் குறித்த அச்சம் இல்லை. எதனால்? மிகுந்த அளவு வலிமையையும், பாதுகாப்பையும் அளிக்கின்ற முறைகளுடன் கூடிய வகையில் தனது கூட்டை அப்பறவை இயல்பாகவே கட்டியிருப்பதே இதற்குக் காரணம். மரவுச்சி எத்துணைதான் அசைந்தாடுவதாயிருப்பினும், கூட்டின் அமைப்பு மாறுபடுவதோ அதன் கட்டுமானம் உலைவு படுவதோ இல்லை; மேலும், எந்த வெளிப்புற ஆட்டத்திற்கும் ஒரு பெருந்தடையாகப் பயன்படும் முறையிலும், தேவைக்கேற்ப உட்புறத்தில் நிறைவான நெருக்கம் மிகுதியாகப் பெறும் முறையிலும் கூடு அமைப்புத் திட்டத்தில் கட்டப்பட்டிருக்கின்றது; ஆகவே, காற்று எத்துணைதான் சீற்றம் கொண்டாலும் பறவைகள், பாதுகாப்புடன் வாழ்கின்றன. இது பழக்கப்பட்ட ஒரு காட்சி. எனினும், அதன் அமைப்பு