பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 10


தனக்குக் கவலையற்ற புகலிடத்தையும், தொல்லையற்ற பாதுகாப்பையும் தரும் கட்டுமானத்தை வரைகோல், நேரறித்தூக்கு நூல், சாரங்கள் ஆகியவற்றின் உதவி கொண்டு அவன் எழுப்புகின்றான்.

இவையனைத்தும் மிக எளிது என கற்பவர் கூறலாம். ஆமாம், எளிதுதான், ஏனெனின், இது உண்மையானது, முழுமையானது. இடை நிலைப்பாடு எதையும் ஒத்துக் கொள்ளவியலாத அத்துணை உண்மையானது, எந்த ஒரு மாந்தனும் மேற்கொண்டு செம்மைப் படுத்தவியலாத அத்துணை முழுமையானது. பொருளுலகத்தில் உள்ள இந்த முறைகளை மனிதன் கற்றுக் கொண்டதுடன் அவற்றைப் பின்பற்றி யொழுகுவதில் அறிவு மேம்பாட்டையும் காணுகின்றான்; நிலைபெற்ற அதே விதிகளை மன உலகிலும் கடைப்பிடித்தொழுகும் முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டே அவை இங்கு குறிப்பிடப் படலாயின; அவை எளிதானதும், என்றென்றும் உண்மையானதும், முழுமையானதுமாகும். எனினும். அவற்றின் இயல்புணராத அறியாமையாலும் காலமெல்லாம் தன்மீது தானே சுமத்திக் கொண்டிருக்கும் கேட்டினை உணராமையாலும், இன்றைய நிலையில் மனிதன் அவற்றை மீறியே நடக்கின்றான் என்பது மிகச் சிறிதளவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது.

தன்னறிவிற்குத் தெரிந்தோ தெரியாமையாலோ அது புறக்கணிக்கப் பட்டுவிட்டால் அழிவிற்கும்