பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

ஜேம்ஸ் ஆலன்


தோல்விக்கும் நம்மை அழைத்துச் சென்றுவிடும். உண்மையில் உலகில் உள்ள நோக்காட்டுக்கும், துன்பத்திற்கும் காரணம் இந்த விதியை அறியாமையால் மீறுவதேயாகும். மனத்தைப் பொறுத்தவரை அற ஒழுக்கப்படி உணர்ந்தறியப்படுகின்றது. கணிதப்படி முறையும், ஒழுக்கப்படிமுறையும் தனித்தனியானதில்லை, எதிர்மறையானதுமில்லை. அவை ஒன்று பட்ட முழுமையின் இரு கூறுகளேயாகும். சடப்பொருள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற கணக்கியலின் நிலைப் பெறு நியதிகளை உடலென்று கொண்டால் நன்னெறியே அதன் உயிர்நிலை; அதேபோது, ஒழுக்கநெறியின் நிலையான முறைகள் மனமென்னும் உலகத்தில் இயங்குகின்ற கணிதப்படியான பொதுவுண்மைகளாகும். ஒழுக்க முறைகளிலிருந்து நீங்கி வெற்றிகரமாக வாழ்வது என்பது கணிதப்படியான முறைகளைப் புறக்கணித்து விட்டு வெற்றியுறக் கட்டுமானத்தை முடித்தல், இயலாத கூற்றேயாகும். குணவியல்புகளும் ஒழுக்கம் எனும் விதியின் அடிப்படையில் கட்டப்படுவதால் மட்டுமே வீடுகளைப் போன்று உறுதியாய் நிற்கின்றன; ஏனெனின், குணவியல்புக் கட்டுமானத்தில் செயல்பாடுகளே செங்கல்களாகும். தொழில்களும், மனிதமுயற்சிகள் அனைத்தும் இந்த நிலையான முறைமையிலிருந்து விதிவிலக்கப்டவில்லை; ஆனால் நிலைபெறு விதிகளைப் பின்பற்றுவதால் மட்டுமே அவை பாதுகாப்புடன் நிலைக்கமுடியும்.