பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

ஜேம்ஸ் ஆலன்


இயற்கையை நோக்குகின்றபோது நாம் மெய்ம்மையை நோக்குபவர்களாகின்றோம்; அதன் எழிலும் மணமும் நம்மை மகிழ்வித்துத் திகைக்க வைக்கின்றன. எங்குமே ஒரு குறைபாட்டை நாம் காணவியலாது; அதோடு, எப்பொருளையும் செம்மையாக்கக் கூடாத நமது தகுதியின்மையையும் நாம் உணர்ந்திருக்கின்றோம். ஒவ்வொன்றும் அதற்கே உரித்தான தனிப்பட்ட நிறைவைக் கொண்டு தன் எளிமையெனும் எழிலுடன் மிளிர்கின்றது.

“இயற்கைக்கே திரும்புதல்” என்பது தற்போதையச் சமூக முழக்கங்களில் ஒன்றாகும். அது நாட்டுப் புறத்தில் ஒரு குடிசையும், பயிர்வளர்க்கச் சிறு பகுதி வயலும் கொண்டிருத்தலையே குறிப்பதாகப் பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. நம்முடன் நம் கபடங்களையும் நாம் கொண்டு செல்வதாயிருப்பின் நாட்டுப் புறத்திற்குச் செல்வது சிறிதளவு பயனுடையதாகவே இயிருக்கும்; நம்முடன் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பகட்டையும் நாமிருக்கின்ற இடத்திலேயே முழுக்கிடுதலே சிறப்புடைத்து. சமூக வழக்க முறைகளின் சுமையால் அழுந்துவதாகக் கருதுவோர், நாட்டுப் புறத்திற்குச் சென்று இயற்கையின் அமைதியை நாடவேண்டுமென்பது நன்மையானதே. ஆனால், அதை எளிமைக்கும், மெய்ம்மைக்கும் நம்மை முட்டுத்தருகின்ற உட்புற நல்வழியின் கருவியாகக் கொள்வதன்றி, வேறு எதற்காக இருப்பினும் அது தோல்வியடைந்துவிடும்.

விலங்கினத்தின் இயற்கையான எளிமையினின்றுமே மனித இயல்பு அலைந்து திரிந்திருக்கின்றதெனினும், அது, ஓர் உயர்வான, எளிமையை நோக்கியே