பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

ஜேம்ஸ் ஆலன்



ஒழுக்க முறைகளைப் புறக்கணிக்கவோ மீறவோ செய்யின், அங்கு இறுதியில் இயற்கையமைப்பின் காரணகாரியத் தொடர்பு முறையிலேயே தோல்வியும், ஏமாற்றமும் இன்றியமையாத விளைவுகளாகி விடுகின்றன; மேல்நோக்கி எறியப்படுகின்ற கல் நிலத்துக்குத் திரும்பி வருதல் போன்று, நல்லதோ கெட்டதோ ஏவி விடப்படுகின்ற ஒவ்வொரு செயலும் நம்மீதே திரும்பி வருகின்றது. தீய நெறியானதோ நெறியற்றதோவான ஒவ்வொரு செயலும் அது குறிக்கொள்கின்ற முடிவையே முறியடித்துவிடுகின்றது. அதற்கு மாறாக, ஒழுக்கநெறி சார்ந்த ஒவ்வொரு செயலும் ஆக்கமெனும் ஆலய அமைப்பின் பிறிதொரு திண்மையான கல்லாகும்; அதைத் தாங்கி நிற்கும் தூண்களுக்குப் பிறிதொரு வலிமையும், செதுக்கப்பட்ட சிற்ப அழகும் அதுவே.

ஒழுக்க வலிமையிலும், அறிவிலும் தமக்குள்ள வளர்ச்சியுடன் இசைந்தே தனிமனிதர்களோடு, குடும்பங்களும், நாடுகளும் வளர்ந்து வளம் பெறுகின்றன; அம்மக்களின் ஒழுக்கச் சிதைவுக்கேற்ப அவர்கள் வீழ்ந்து தோல்வியடைகின்றனர்.

உலகப் பொருளில் அமைந்திருப்பது போலவே மனவியலிலும் உருவமும், திண்மையும் உடையதாயிருப்பது மட்டுமே நின்று நிலைபெற முடியும். தீயநெறி என்பது வெறுமை; அதனின்று எதையுமே உருவமைக்க முடியாது. அது அடிப்படையின் எதிர்மறை, நெறியின்மை என்பது அழிவு. அது உருவத்தின் எதிர்மறை. அது