பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 36


எவரே மிகுதியான நேரம் கொண்டிருக்கக் கூடும்? தீர்க்கமான தலைகளும், நல்ல நெஞ்சங்களும் கொண்ட மனிதர் ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கணத்தையும் பயனுடனும், களிப்புடனும் செலவிடுகின்றனர்;

இன்னலத்தையும், நன்னிலையையும் ஆள்வினை பெருக்குகின்றது. சுறுசுறுப்புள்ள மனிதன் ஒவ்வோரிரவும் தளர்ச்சியுடன் படுக்கச் செல்கின்றான். அவன் உளைவுபடாது, இனிமையான உறக்கம் கொள்கின்றான். அவன், மகிழ்ச்சியூட்டும் மற்றொரு நாளைய உழைப்பிற்காகப் பொலிவுடனும், வலிவுடனும் மறுநாள் விடிகாலையில் துயிலெழுந்து விடுகின்றான். அவனுக்கு நல்ல பசியும், செரிமானமும் ஏற்படுகின்றன. அவன் பொழுது போக்கில் ஒரு சிறந்த சுவைச் சத்தையும், உழைப்பில் ஒரு நல்ல ஏற்றத்தையும் காணுகின்றான். அத்தகைய மனிதன் மந்தம், சோர்வு இவற்றுடன் என்ன தோழமையைக் கொள்ள முடியும்? சிறிதளவு உழைத்துப் பெருமளவில் உண்ணுபவரையே அத்தகைய பதனிழந்த உணர்ச்சிகள் சுற்றி வளைக்கின்றன. சமூகத்திற்குப் பயன்படுபவர்களாகத் தம்மை ஆக்கிக் கொள்ளும் மக்கள் சமூகத்திலிருந்து தங்கள் முழுப் பங்கான நலம், மகிழ்ச்சி, ஆக்கம் ஆகியவற்றைத் திரும்பப் பெறுகின்றனர். அவர்கள் அன்றாடக் கடமையை மகிழ்வுடையதாக்கி உலகம் முன்னேறும் வகை செய்கின்றனர். அவர்கள் நாட்டின் பொற் சுரங்கம்; மண்ணின் இனிய சாறம்.

“அக்கறை அழியாமையைப் பெறும் வழியாகும். அக்கறையுடையோர் இறந்துபடுவதில்லை. அக்கறை இல்லாதோர் ஏற்கனவே இறந்துபட்டவர்களுக்-