பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெற்றிக்குரிய எட்டுவழிகள்

ற ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே ஆக்கம் அமைந்து கிடக்கின்றது. சூது, அடாவடி, ஏமாற்றல், பேராசை ஆகிய ஒழுங்கீனத்தின் அடிப்படையில் அது அமைந்து விடுவதாகப் பொதுவழக்காகக் கருதப்படுகின்றது. வாணிபச் செழிப்பு எனும் நன்மை நாணயக் குறைவு என்னும் தீமையின் விளைவுதான். பிறவகைகளில் அறிவுக் கூர்மையுடையவனாயிருக்கின்ற மனிதனுங் கூட “ஒருவன் நாணயக் குறைவுடன் நடந்து கொள்ளவில்லை என்றால் அம் மனிதன் வாணிபத்தில் செழிப்புடையவனாக இருக்க முடியாது” என்று அறுதியிட்டுக் கூறுவதை நாம் சாதாரணமாகக் கேள்விப்படுகின்றோம். அத்தகைய கூற்று மேலெழுந்த வாரியான சிந்தனையற்றதாகும்; அற ஒழுக்கத்தைக் குறித்த காரணகாரியத் தொடர்பு பற்றிய அறிவு சிறிதும் இல்லாததையும், அளவில் புரிந்து கொண்டிருப்பதையுமே அது எடுத்துக் காட்டுகின்றது. இது, கள்ளிச் செடியை விதைத்துவிட்டுத் தேமாங்கனியை அறுத்தெடுக்க வேண்டும் என்று காரண காரியத் தொடர்பின் இயற்கையமைப்பில் கைகூடாத செயல்களைக் கூறுவதற்கு ஒப்பாகும்;