பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 74



நாணயமான மனிதனும் தோல்வியடயலாம்; ஆனால், அவன் நாணயமாக இருந்து வருவதால் தோல்வியடையவில்லை; அவனுடைய தோல்வி தகைசான்றதாவே இருக்கும் அவனுடைய குணவியல்புக்கும் புகழுக்கும் ஊறு விளைவிக்காது. குறிப்பிட்ட திசையில் அவனுக்கு திறமையில்லாததன் விளைவாக ஏற்படும் தோல்வியும் கூட, அவனுடைய திறமைகளுக்குப் பொருத்தமான ஏதேனும் ஒன்றிற்கும், அதன் காரணமாக இறுதியான வெற்றிக்கும் வழிகாட்டும் வகையுமாகவே இருக்கும்.

அஞ்சாமை – நாணத்தைத் தொடர்ந்தே வருகின்றது. நாணயமுள்ள மனிதன் தெளிவான கண்ணும், மனவுறுதியுடன் நிற்கும் பார்வையும் கொண்டிருக்கின்றான். அவன் தன் கூட்டாளிகளை முகத்திலேயே உற்றுப் பார்ப்பதுடன், அவனுடைய பேச்சு நேரடியானதாகவும், அமைதியுடையதாகவும் இருக்கும். பொய்யானதாகவும், ஏமாற்றுபவனாகவும் இருப்பவன் தனது தலையைத் தொங்கவிடுகின்றான்; அவனுடைய கண்கள் குழம்பிக் கலக்க முற்றுப் பார்வைக் கோணலுடன் இருக்கின்றன. அவன் பிறிதொரு மனிதனைக் கண்ணில் ஏறிட்டுப் பார்க்க முடிவதில்லை. உறுதியற்றதாகவும், நிறைவற்றதாகவும் இருப்பதால் அவனுடைய பேச்சு அவநம்பிக்கையையே உண்டு பண்ணுகின்றது.

நாணயமற்ற மனிதர் எப்போதும் அச்சத்துடனேயே இருக்கின்றனர். அவர்கள் கடன் பட்டதற்காக அஞ்சுவதேயில்லை. ஆனால், தம் கடன்களைச் செலுத்த வேண்டுமே என்பதற்காகவே அஞ்சுகின்றனர். அவர் தம் கூட்டாளிகளைக் கண்டு அஞ்சுகின்றனர். அதிகாரிகளைக்