பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

ஜேம்ஸ் ஆலன்


கண்டு அஞ்சுகின்றனர். தம் செயல்களால் விளையும் விளைவுகளுக்காக அஞ்சுகின்றனர். மேலும் தம் குற்றச் செயல்கள் வெளிப்பட்டு விடக் கூடாதே என்பதற்காகவும், எந்த விநாடியிலும் தம்மைச் சூழ்ந்துவிடக்கூடிய அவற்றின் விளைவுகளுக்காகவும் இடைவிடாது அச்சம் கொண்டிருக்கின்றனர்.

நாணயமுள்ள மனிதன் அச்சத்தின் இச் சுமையனைத்தும் களைந்தவனாக இருக்கின்றான். அவன் கவலையற்றுத் தன் கூட்டாளிகளிடையே நிமிர்ந்து நடப்பவனாகவும் இருக்கின்றான்; எந்தக் குணத்தையும் பாவனை செய்து கொள்ளாதவனாகக் கடமையில் தவறாதவனாகக் கெஞ்சுதல் இல்லாதவனாகத் தன்னியல்போடு இருப்பவனும், கணக்குக் கண் காண்பவனுமாக இருக்கின்றான். எவ்வித வஞ்சனையோ ஊறு விளைத்தலையோ செய்யாத நிலையில் அஞ்ச வேண்டியவர்யாருமிலர்; அவனுக் கெதிராகக் கூறப்படுவது எதுவாயினும் அது அவன் நற்பயனுக்காகவே சேர்ந்துதவும்.

நெருக்கடிகள் அனைத்தின்போதும் உதவி புரிந்து, இடர்ப்பாடுகளை ஆண்மையுடன் பொருது வெல்ல உதவி செய்து, முடிவில் அவனிடமிருந்து கவரப்பட முடியாத மேன்மையையும் அஞ்சாமையே மனித வாழ்விற்கு ஒரு வலிமையான அரணாகும்.

இலக்கு : சால்பு ஊட்டி வளர்க்கின்ற குணவியல்பு வலிமையின் நேரடியான விளைவேயாகும். சால்புடைய மனிதன் நேரடியான குறிக்கோள்களும், வலிமையும் அறிவுக் கூர்மையுள்ள உட்கோள்களும் கொண்ட