பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

6



ஆகவே, அது முயற்சி செய்யப்படக் கூடாத ஒன்று. ஒழுக்கநெறி சார்ந்த காரண காரியத் தொடர்பமைப்பு கொள்கையளவில் வேறுபட்டதன்றி அடிப்படையில் மாறுபட்டதன்று. இயற்கைப் பொருள்களின் படிமுறைகளை மனிதன் காணுகின்றான்; அவற்றிற்குத் தக்கச் செயலில் ஈடுபடுகின்றான். ஆனால் ஆன்மீகப் படிமுறைகளை மனிதன் காணப்பெறாததால் அவை இயங்கவே இல்லையெனக் கருதி அவற்றுடன் இசைவற்றுச் செயலில் ஈடுபடுகின்றான்.

நீதிக்கதைகள், அறமொழிகள் அனைத்தும், மேதகு ஆசிரியர்களின் பழமொழி பலவும் இவ் உண்மையினை விளக்கிக் காட்டுதற்கெனத் திட்டம் செய்யப்பட்டனவே. மன உலகம் காட்சிக்குரியதாய் ஆக்கப் பெற்றதே இயற்கையுலகம். காணப்படாததின் கண்ணாடியே காணப்படுவது. ஒரு வட்டத்தின் மேற்பாகத்தை விடக் கீழ்ப்பாகம் எவ்வகையிலும் மாறுபட்டதன்று; ஆனால் அதன் உருண்டை வடிவம் தலைகீழாக இருக்கின்றது. அவை ஒரு முழுவட்டத்தின் இருநேர் பாதிகளேயாகும். இயற்கை சார்ந்தனவும், ஆன்மீகம் சார்ந்தனவும் நிலையான பகைமை கொண்டனவல்ல; ஆனால் உலகத்தின் உண்மையான ஒழுங்க மைப்பின்கண் அவை ஒன்றெனவே நிலையாக உறைகின்றன. கடமையையும், செயல் திறனையும் தவறாகப் பயன்படுத்துவதான இயற்கைக்கு மாறுபட்ட நிலையிலேயே பிரிவு பிறக்கின்றது; அந் நிலையிலேயே,