பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 84



முறைப்பாடு எவ்வாறு மேம்பாட்டுடன் உறவு கொண்டுள்ளது என்பதை நாம் காணலாம். ஏனெனின், வாணிபம், சட்டம், சமயம், அறிவில் அரசியல், ஏன் மனித முயற்சியின் ஒவ்வொரு துறையிலும் நிலைபேறு கொண்டதும், மீறக் கூடாததுமான விதிகளை நிறுவுவதில் உடனடியானதும், தப்பமுடியாததுமான இன்றியமை யாமையை உணருகின்ற ஒருசிலரின் ஒழுங்கமைப்பு ஆற்றலால் முறைப்பாடென்னும் ஒழுங்கில் பயிற்றுவிக்கப்படாத பல தனித்தனியான ஆள்கள் அவரவர் இடத்திலேயே அமர்த்தப்பட்டு விடுகின்றனர். ஏனெனின், இரு மனிதர்கள் கூடிய நேரத்திலேயே குழப்பத்தைத் தவித்தற் பொருட்டு இருவரும் ஒத்துணருகின்ற ஏதேனும் பொது அடிப்படை தேவைப்படுகின்றது. ஒரே சொல்லில் கூறுவதெனின் அவர்களுடைய செயல்களை ஒழுங்குபடுத்த ஏதேனும் முறைப்பாடு தேவைப்படுகின்றது.

குழப்பத்திற்கு இடங்கொடுக்க இயலாதபடி வாழ்க்கை மிகவும் குறுகியதாகும். தடையையும், தாழ்வையும் நீக்குகின்ற முறைப்பாடென்னும் சாலையின் வழியே அறிவுவளர, முன்னேற்றம் முன் செல்கின்றது; எனவே, தனது அறிவையோ வாணிபத்தையோ முறைப்படுத்துடன், தன் பின் மரபினர் தான் விட்டுச் சென்ற இடத்திலிருந்து திறந்த மனத்துடன் அதைத் தொடங்க உதவும் வகையில் அதைச் சிக்கலறுத்து மேன்மையுடையதாக்கித் தருபவனாகிறான்.

ஒழுங்கு முறைக்கும், கட்டுப்பாட்டிற்குமான ஓர் உள்ளார்ந்த விருப்பும், அத்தகைய ஒழுங்கு முறையினின்றும் தோன்றுகின்ற மன அமைதியும்,