பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வேண்டும் விடுதலை

கவனிப்பர். இக்குழுவுக்கு வேந்தம் என்று பெயர். இவ்வைவர் குழு உறுப்பினர்களும் ஆர்வலர்களே இவ்வைவரில் பொதுச்செயலர் உள்ளிட்ட ஒருவர் தாமே விலகினால் அன்றி, அனைவரும் வாணாள் உழைப்பாளர்களே! நீக்கப்பெற்ற அல்லது நீங்கிய ஒரு மாதத்திற்குள் வேறு ஒருவரை அமர்த்திக்கொள்ளலாம்.

3. இதுபற்றிய அமைப்பு முறைகளைக் குழு அமைக்கப்பெற்ற மூன்று மாதங்களுக்குள், தமக்குத்தாமே வகுத்துக்கொண்டு அவ்வகு முறைகளுக்கேற்பத் தம்மையும் இயக்கத்தையும் செயற்படுத்த வேண்டும்.

4. பொதுச் செயலரை வேந்தத்தின் பிற நால்வரும் அப்போதுள்ள ஆர்வலரில் நான்கில் மூன்று பங்கினரும் குழுவினின்று நீக்கலாம்.

5. எப்பொழுதும் ஆர்வலரில் பத்தில் ஒன்பதின்மர் கூடிப் பொதுக்குழுவின் முன்னிலையில் வேந்தத்தின் மேல் குற்றஞ்சாட்ட அதைக் கலைக்கலாம் புது வேந்தத்தையும் தெரிந்தெடுக்கலாம் எப்படியும் வேந்தம் கலைக்கப்பெற்ற இருபத்துநான்கு மணி நேரத்திற்குள் மறு வேந்தம் தெரிந்தெடுக்கப் பெறல் வேண்டும்

6. இயக்கத்தில் உள்ள ஆர்வலரைச் செயற்குழு நாலில் மூவர் வலிவுடன் எப்பொழுதும் விலக்கலாம்.

7. இயக்கத்தில் ஆர்வலராகச் சேர ஏற்கெனவே உள்ள ஆர்வலரில் பதின்மர் ஒப்புதலளிக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப் பெறும் ஆர்வலரின் குற்றங்குறைகட்கு அப்பதின்மரும் இறுதிவரை பொறுப்பாவர்

8. தொடக்கத்தில் வேந்தம் தேர்ந்தெடுக்கும் ஆர்வலர் ஒவ்வோர் ஊருக்கும் பதின்மரே.

9. அவர்க்குப்பின் தேர்தெடுக்கப் பெறும் ஆர்வலர் ஒவ்வொருவர்க்கும் முன்னுள்ள ஆர்வலர் பதின்மர் ஒப்புதலளிக்க வேண்டும்.

10. தேறப்பெறும் ஒவ்வோர் ஆர்வலரையும் ஒப்பிய பதின்மர் ஒரே ஊரினராக இருத்தல் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

11. இவ் வகுமுறைகளை மேலும் விரிவுபடுத்தவோ, இவை தொடர்பான வகுமுறைகளைப் புதிதாக அமைக்கவோ முதல் மூன்று மாதத்திற்குள் கூடும் முதல் வேந்தத்திற்கு முழுவதிகாரம் உண்டு.

12. அடுத்தடுத்துத் திருத்தப்பெறும் அல்லது நீக்கப்பெறும்