பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

109

தன் ஆளுமை, சட்ட , அதிகாரத் தொடர்பினின்று விடுவித்து, நிலக்காவல் இணைப்பு வாணிகத் தொடர்பு ஆகியவற்றில் ஓர் அரசியல் ஒப்பந்தம் (poli tcal cointract) செய்து கொண்ட தன்னுரிமை பெற்ற தனி நாடாகத் தமிழகத்தை ஏற்றுக்கொண்டு அறிவிக்குமாறு இந்திய அரசை இம்மாநாடுடு கேட்டுக்கொள்கின்றது.

செயற்பாடு :

இதன்படி, இம்மாநாட்டில் அமைக்கப் பெற்ற தமிழக விடுதலை இயக்கம் இன்றிலிருந்து 1975 மே மாதம் வரை உள்ள காலத்தை வேண்டுகோள் காலம் (Period of entreatl

or period of supplication) ஆகக் கொண்டு இவ்வியக்கம் வகுக்கும் திட்ட முறைப்படி செயலாற்றுமென்றும், அச்செயல் முறைகளால் பயன் காணாவிடத்து, 1975 சூன் மாதம் 1978 மே வரை உள்ள காலத்தைப் போராட்டக் காலம் (period of Agitation) ஆக அறிவித்து இயக்க முறைகளுக் கேற்பப் பேராடுமென்றும், அப்போராட்டத்தாலும் பயன்காணா விடத்து 1978 சூன் முதல் தொடங்கும் காலத்தைப் புரட்சிக்காலம் (period of Revolution) ஆக அறிவித்து இக்கொள்கை வெற்றி பெறும் வரை பலவகையாலும் நேரடிச் செயல்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடுமென்றும் உறுதி செய்வதுடன் இந்திய அரசையும் எச்சரிக்கின்றது.

செயல்திட்டம்:

திருச்சிராப்பள்ளித் தேவர் மன்றத்தில் 10-6-72, 11-6-72 ஆம் நாட்களில் கூடிய தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டில் நிறைவேற்றப் பெற்ற இரண்டு தீர்மானங்களின் அடிப்படையில் வகுக்கப் பெற்ற செயல் திட்டம்.

1. ஆளுமை

1. செயற்குழு, ஆர்வலர், வகுமுறைகள் தொடர்பானவை:

1. தமிழகப் பிரிவினைக் கொள்கையை வலியுறுத்துவதற்கும் செயற்படுத்துவதற்கும் தமிழக விடுதலை இயக்கம் எனுமோர் இயக்கத்தை அமைப்பது.

2. அத்தமிழக விடுதலை இயக்கம் ஒரு கட்சியைப் போன்றதன்று, அதற்கு உறுப்பினர்கள் இல்லை. ஆர்வலர்கள் தாம் உண்டு. தலைவர் இல்லை. பொதுச்செயலர் ஒருவரும், அவரடங்கிய ஐவர் குழுவும் இயக்கச் செயற்பாடுகளை வகுத்துச் செயலமைப்புகளைக்