பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வேண்டும் விடுதலை

மொத்தத்தில் வன்முறை நிலையில் முன்னண்மையில் வங்காளத்து நடந்தவாறும் இக்கால் வியட்நாமில் நடக்கின்றவாறும் போர் முறைகள் பின்பற்றப் பெறும்.

இ) மொத்தத்தில் ஒரு புதுக் குமுகாயமும், ஒரு புது நாடும் தோற்றுவிக்கப்பெறும்.

3. கொளுவுரை:-

அ) இவ்வுலகத்து முந்தித் தோன்றியதும், உலகெலாம் பரவியதும், பண்பாட்டிற் சிறந்ததும் ஒண்மையும் திண்மையும் சான்றதும், முதன்மொழி தோற்றியதும், இன்றும் அழியாது நின்றிலங்குவ துமாகிய தமிழினப் பெருங் குமுகாயத்தின் கடந்த மூவாயிரமாண்டுக் கால அடிமை வரலாற்றுக்கு ஒரு முடிவுக் காலமும் தமிழ்ப் பேரினத்திற்கொரு விடிவுக் காலமும் தொடங்கி விட்டது. வரலாற்றில் இனப்புரட்சி என்றும் தோற்றதில்லை.

இதனை நன்றாக உள்ளத்தில் ஏற்றிக்கொண்டு கனன்று வரும் பெரும் புரட்சித் தீயினுக்குக் காற்றாயிராமல் உளத்தால் நீர்மையாகவும் அறிவால் முன்மையராகவும் நடந்து கொள்ள வேண்டி மொழி, குமுகாய அரசியல் தொடர்புடை அனைவரும் வேண்டிக் கொள்ளப்பெறுகின்றனர்.

- தென்மொழி, சுவடி :10, ஓலை :1-5, 1972