பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

வேண்டும் விடுதலை

திருவையாறு. 62. இர. முத்தையன், தீபாமங்கலம். 63. குன்னத்தூர். ச. தம்பி, சென்னிமலை. 64. க. தமிழப்பன், திருப்பூர் - 4. 65. பூபதி (வேங்கையன்), சோலையார்பேட்டை. 66. அருள் வேட்டன், கண்ணூற்று. 67. ஓடை. தமிழ்ச்செல்வன், மேலுனர். 68. கதிரவன், உரத்தநாடு. 69. ஒளி. மலரவன், வெங்காலூர், 70. சேரலாதன், வெங்காலூர்.

(இப்பட்டியலில் பத்துப் பெயர்கள் விடுபட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே ஊர்வலத்தில் கலந்துகொண்டு, 9.6.73 அன்று காவல் நிலையத்தில் சிறைப்பட்டு இறுதி முறையாகப் பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்கள் தங்கள் பெயர்களையும் முகவரிகளையும் தெரிவிப்பார்களாயின், அவை அடுத்த இதழில் வெளியிடப் பெறும்)

அடுத்து, பிற்பகல் மாநாட்டு நிகழ்ச்சியும் காவல் நிலையத்திலேயே நடந்தது. திரு. நா. இளமாறன் மீண்டும் தம் விடுதலையுணர்வுப் பாடல்களைப் பாடினார். திருச்சி வழக்குரைஞர் அ.மு. சம்பந்தம் பிற்பகல் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். குறிப்பிட்ட வேளையில் வரவியலாமையால் காலையில் நடந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளவும், காவல் நிலையத்தில் தளைப்படவும் இயலாத தஞ்சைப் புலவர் திரு. த. சரவணத்தமிழனாரும், காரைக்குடிக் கல்லூரி மாணவர் திரு. மா. ஆடலரசும், புதுவைக் கல்லூரி மாணவர் ப. அடியார்க்கருளியும் பிற்பகல் மாநாட்டில் தொடக்கத்தில் பேசினர். (இம் மூவரும் காலங் கடந்து வந்தும் காவல் நிலைய அதிகாரிகளிடம் சென்று தங்கள் பெயர்களையும் பதிவு செய்து கொண்டு சிறைப்படுத்துமாறு வேண்டினர். ஆனால் ஊர்வலத்தில் வந்தவர்களை மட்டுமே நாங்கள் சிறைப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் அறவே மறுத்துவிட்டனர்.)

திரு. தமிழனார், தாம் காலங் கடந்து வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டு தளைப்படுத்தப் பெறாமைக்கு வருந்தியும், மாநாட்டுப் பெருமைகளை விரித்தும் பேசினார். திரு. ஆடலரசு விடுதலையுரையாற்றினார். திரு. அடியார்க்கருளி தமிழின் பெருமை பற்றிக் காவலர்களுக்கு மிகத் தெளிவாகச் சுவைபட எடுத்துக் கூறினார். காவலர்கள் மிக நெருக்கமாக வந்து நின்று மிக ஆர்வத்துடன் கேட்டனர். அதன்பின்னர் திருவாளர்கள் க. வெ. நெடுஞ்சேரலாதனும், அருட்குவையும் தமிழரின் அடிமைத்தனம் பற்றியும். இந்திராவின் ஆட்சிபற்றியும் பேசினர். திரு. மறை. நித்தலின்பன் அறம் வெல்லும் என்று பேசினார்.