பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

177


 
“தனி நாடு” கோரிக்கை
அனைத்துலகச் சட்டப்படி குற்றமன்று!


“அனைத்து நாடுகள் சட்டப்படியும், உலக ஒன்றிய நாடுகள் (U.N.O) அமைப்புறுதிப்படியும், கூட்டுச்சேரா நாடுகளின் (1964) ஆம் ஆண்டு அறிவிப்புப் படியும், தமிழ் மக்கள் தனிநாடு கோருவதற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்கள். சட்ட அடிப்படையான தன்னுரிமைக்காக, தன்மானமுள்ள தமிழர்கள் நடத்தும் தமிழக விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு குற்றமாகக் கணிப்பது அடிப்படை மக்கள் உரிமையைப் பறிக்கும் சட்டப்புறம்பான செயலாகும்’ -என ஈழத்தமிழ்நாடு அமைத்திட அரும்பாடுபட்டு வரும் தமிழர்களுக்கு உதவிகள் செய்து பெரும்புகழ் பெற்ற இங்கிலாந்து நாட்டின் ஆங்கில வழக்குரைஞர் இருவர், இந்தியத் துணைக்கண்ட அரசு கொணர்ந்த பிரிவினைத் தடைச்சட்டம் பற்றி பிரிட்டனில் உள்ள 'தமிழர் முன்னேற்றக் கழகம்’ (T.M.K) கேட்டிருந்த சட்ட விளக்கம் பற்றி ஆய்ந்து கருத்தறிவித்துள்ளதாக அங்கு நடந்து t U < j A H < F us ' (Voice of Tamils Anti-official Newsletter Published by T.M.K) என்னும் செய்தியேடு தன் ஆகத்து 77 இதழில் ஆசிரியவுரை எழுதியிருக்கின்றது. அக் கட்டுரையில் அதன் ஆசிரியர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது.

தங்கள் சொந்த ஊதியம் (நன்மை) கருதி அதிகாரத்தில் உள்ள வடஇந்தியக் கட்சியினர் கொண்டு வந்த பிரிவினைத் தடைச்சட்டம்