பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

வேண்டும் விடுதலை

அம்பேத்கார் குழுவினர் வகுத்தளித்த இந்திய அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பாவதாகும். ஐம்பது ஆண்டுக் காலமாகத் தமிழ் நாட்டுப் பிரிவினை கோரும் தமிழர்களைக் கருத்தில் கொண்டு கொணர்ந்த தடைச்சட்டமாகையால், அதற்குத் தமிழ்மக்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, அப்பிரிவினைத் தடைச் சட்டத்திற்கு சட்டவலு இருக்க முடியும்.

'இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் நாடு முழுமைக்கும் பொருந்தும் எனவும் கூறுவதை அனைத்து நாடுகள் சட்டத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளுகின்ற அதேநேரத்தில் அதே அனைத்து நாடுகளின் சட்டத்தின் கீழ் தன்னாட்டு உரிமைக் கோரிக்கைகளும் அவற்றுக்கான போராட்டங்களும் சட்ட நிறைவானவை என்பதையும் எவரும் மறுத்தற்கியலாமற் போகும். எனவே தமிழன் - நிலப்பிரிவினைக்குக் குரல் கொடுக்கும் எவரும் அனைத்துநாட்டின் சட்டப்படி குற்றவாளியல்லர். அம்பேத்கார் குழுவினர் ஆக்கிய இந்திய அரசியல் சட்டப்படி'இந்திய ஒன்றியத்தில் (Union) சேர்ந்துள்ள நாடுகள் பிரிந்து போகும் உரிமை வரையறுக்கப்பட்டிருப்பதால் இந்திய அடிப்படை அரசியல் சட்டப்படியும் குற்றமாகாது.

கூட்டுச்சேரா நாடுகளின் இரண்டாவது மாநாடு 1964ஆம் ஆண்டு செய்ரோவில் நடைபெற்றபோது 'தங்கள் அரசியல் உரிமையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுரிமை உண்டு' என்று தீர்மானம் அங்கு நிறைவேற்றப் பெற்றது. அத்தீர்மானத்தை இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தங்களுக்கென ஒரு நாடும் அரசும் இல்லாத பாலத்தீனியர்களின் தன்னமைப்பு உரிமைக் கோரிக்கையை இந்தியா உட்படப்பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கும் பொழுது, தங்களுக்கென ஒரு நாடு இருந்தும், அரசுரிமையற்றிருக்கும் தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கை எந்த வகையில் தவறானதாகும்?

இருநாடுகளின் சட்டமன்றங்கள் அல்லது மக்களால் தெரிவு செய்யப்பெற்ற படி நிகராளிகள் விரும்பிச் சட்டமியற்றி, ஒரே நாடாக இணைவதற்கு அதிகாரம் அளிப்பதன் வழியும், ஒருநாடு மற்றநாட்டை வலிந்து கவர்ந்து கொண்ட (seized by violence or occupied by force) வழியும், ஒரு நாடு தனது அரசுரிமையை மற்றநாட்டிற்கு உரிமைப்படுத்திக் கொடுப்பதன் வழியும், இருநாட்டு மக்களின் விருப்பத்தின் வழியாகவும் தான், இருநாடுகள் ஒரு நாடாக ஆக முடியும்.