பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

233

நாட்டு நுழைவுப் போராட்டத்திற்கு மக்களை எழுச்சி கொள்ளச் செய்வதுமான அதிரடி மருத்துவ முறை, இங்குள்ள தலைவர்களின் நோக்கத்தைத் திசைதிருப்புகின்ற உத்திகளே!

தலைவர்களை வெளியேற்றி விட்டு, ‘இங்குள்ள தந்நலக்காரர்களால் தாம் பேச்சு தடைப்படுகிறது’ என்பதெல்லாம் கொடுமையான குற்றச்சாட்டு பேச்சு தொடங்கிய பின்னரும், இலங்கைக் கயவாளிகள் தங்கள் கொடுமைகளைக் கைவிடாமல் இருப்பது இந்திய அரசியல்காரர்களுக்குத் தெரியவில்லையா?

'டெசோ' நடத்திய தொடர்வண்டிப் போராட்ட விளைவைக் கூட, இங்குள்ள இந்திராக் கட்சித் தலைவர்கள் தில்லியில் போய், இராசீவ் காந்தியைச் சந்தித்ததால் ஏற்பட்ட விளைவு என்று திசை திருப்புவதை மக்கள் உணரவேண்டும். அதிகாரமும், விளம்பரமும் வாய்த் தித்திரிக்கமும் இருந்தால், கழுதையைக் கூடக் குதிரையாக விலைபோக்கிக் காட்டலாமே!

இந் நிலையில், சில தவிர்க்கவியலாத அழுத்தம் காரணமாகத் திம்புப் பேச்சில் தொடர்ந்து ஈடுபட விரும்பும் தமிழீழப் போராளிகள், தமிழீழம் ஒன்றே என்னும் தங்கள் குறிக்கோளில் சிறிதும் நெகிழ்ச்சி காட்டாமல் இருப்பது நல்லது. அதற்கிடையில், இந்தியாவின் பேச்சுக்கு ஒத்துழைப்புத் தர விரும்பினால், முதலில் பேச்சுரைக்கு மூல அடிப்படையாக, பேச்சுரை முடியும் வரை இரு தரப்பாரும் போராட்ட நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்பதையே, இந்தியாவின் முயற்சிகளுக்கு முத்தாய்ப்பாக வைக்கவேண்டும்.

கலைஞர் அவர்களின் இன்றைய ஈடுபாடு மிகவும் மதிக்கத்தக்கதும், போற்றிக் கொள்ளத் தக்கதும் ஆகும். போராடாமல் தமிழினம் எந்தப் பயனையும் பெற்றுவிட முடியாது. போராடித்தான் எதையும் பெறமுடியும் என்னும் நிலைவந்துவிட்ட பின், நாம் பின்வாங்க வேண்டியதில்லை. ஆனால், இடையில் குறுக்கிடும் எந்த அரசியல் நலனையோ, சலுகையையோ நாம் புறக்கணிக்க வேண்டும். கலைஞர், தொடர்வண்டிப் போராட்ட முடிவுபற்றியும், அடுத்த போராட்டத் தொடக்கம் பற்றியும், அண்மையில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்த, "உரிமைத் தமிழீழம்தான் ஈழத் தமிழர்களின் நலன் காக்கும் ஒரேவழி என்பது 'டெசோ'வின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்... தமிழ் ஈழத்தை ஆதரிப்பதும், ஈழத்தமிழர் நலனுக்காகக் கவலைப்படுவதும் பிரிவினைக் கொள்கை என்றான்