பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

வேண்டும் விடுதலை


 
குடமுருட்டியில் வெடித்த குண்டு


"ஏறத்தாழ எழுபது கோடி மக்கள் வாழ்கின்ற, உலகின் மிகப் பெரிய குடியரசு நாடு இந்தியா. இந்த நாட்டில்தான் உலகில் மிகச் சிறந்த ஆன்மீக உணர்வு பொங்கித் துளும்புகிறது; இங்கு தான் வற்றாத 'புனித' ஆறுகளும், எண்ணிலடங்காத கோயில் - குளங்களும் நிறைந்திருக்கின்றன; மேலும், இந் நாட்டைத்தான் முப்பத்து மூவாயிரம் தேவர்களும், பதினெண்ணாயிரம் முனிவர்களும், கின்னரர், கிம்புருடர் போன்றவர்களும், சிவன், விண்ணு, பிரம்மா போன்ற கடவுள்களும், வலம் வந்து காக்கிறார்கள். (மற்ற நாடுகளை யார் காக்கிறார்களோ தெரிய வில்லை). இஃது உலகிலேயே மிகவும் புண்ணியம் நிறைந்த நாடு” என்றெல்லாம் தொன்மைப் பெருமைகள் நிலவுகின்றன. இங்குதான் வெறும் மேலுடன் சுற்றித் திரிந்த காந்தி என்னும் மாந்தத்தெய்வம்(!) பிறந்தது; இங்குதான் புத்தர் என்னும் 'புண்ணியன்' நல்லிறக்கம் கொண்டார்’ என்றவாறெல்லாம் புகழ்பாடிக் கொண்டாடுகிறார்கள்.

இத்தகைய சீரும் சிறப்பும்(!) கொண்ட இந்நாட்டின் தலைமை அமைச்சர்தாம் குண்டு தொளைக்காத எஃகுக் கவசச்சட்டை அணிந்துகொண்டு, பல்லாயிரக்கணக்கான காவலர்கள் புடைசூழ்ந்து காவல் காக்க, குண்டுகள் ஊடுருவாத கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று பேசுகிறார் என்றால், இஃது ஒரு குடியரசு நாடு என்றோ, இங்குள்ள தலைமையமைச்சர் மக்கள் நலம் கருதுகிறவர் என்றோ கூறவியலுமா என்பதைத் தேசியம் பேசும் திருடர்கள் எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

அண்மையில் திருவையாறு இசை விழாவிற்கு வரவிருந்த இந்நாட்டின் தலைமை அமைச்சர் வருகைக்கு இரு நாள்களின் முன், தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ள குடமுருட்டி