பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

261

ஆற்றின் பாலத்தில் வெடிகுண்டு வெடித்தது. இதை வெடிக்கச் செய்தவர்கள் 'உழவர்கள் விடுதலை இயக்கம்' என்றும் 'தமிழக விடுதலைப் படை' என்றும் செய்தித்தாள்களில் செய்தி வந்தது. யார் இந்தக் குண்டை வைத்தார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்கும்பொழுது, நம் இந்திய ஆட்சித் தலைமையைப் பற்றி வெட்கித் தலை குனியத்தான் வேண்டும்.

“காவிரி வறண்டு கிடக்கும்போது, இராசீவ் காந்தியே, தியாகராயர் திருப்போற்றி விழாவுக்காக உங்கள் வருகை தேவைதானா?" என்றும்,

"இராசீவ் காந்தி ஓர் இந்தி வெறியர், அவர் இலங்கைத் தமிழர் சிக்கல் குறித்துப் புறக்கணிப்பாக இருக்கிறார்" என்றும் குண்டு வெடித்த பாலத்துக்கு அருகில் கிடைத்த அறிக்கைகளிலும், சுவரொட்டிகளிலும் செய்திகள் இருந்தனவாகத் தெரிகின்றன. இவற்றில் உள்ள கேள்வியும், கருத்தும் ஞாயம் அற்றனவென்று கருதிவிட முடியாது. இங்குள்ள இலக்கக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் இருக்கின்ற உணர்வுதான் அது.

வெறும் விளம்பரத்தாலும், வேடிக்கை விழாக்கள், விளையாட்டுகள் போலும், பணக்காரப் பொழுதுபோக்குகளாலும் இந்நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள், உழவர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களின் வயிறு நிரம்பிவிடாது. ஆட்சி என்பது அவர்களுக்காகத்தான் - பெரும்பான்மையும் இருக்க வேண்டுமே தவிர, வடையும், பொங்கலும் நெய் வழிய வழிய முக்கிவிட்டுப் பண்பாடு, கலை, என்று வாய்ப்பாட்டுப் பாடிக்கொண்டும் அதற்குத் தக ஆடிக் கொண்டும், பட்டாடை உடுத்திக்கொண்டு அவற்றைக் கேட்டும் பார்த்தும் தலைகளை ஆட்டிக் கிறுகிறுத்துப் போகும் சிறுபான்மை மக்களுக்காக மட்டுமே அன்று என்று எச்சரிக்கை செய்யத்தான் இந்தக் குடமுருட்டிப் பாலத்தில் வெடித்த குண்டு என்று அதிகார வெறியர்கள் எண்ணிக்கொள்க!

காவிரி நீரின் ஒப்பந்தத்தை ஓர் ஒழுங்கு செய்து, தமிழக உழவாண்மைக்கு உயிரூட்ட ஒரு முயற்சியும் செய்யாத அதிகாரிக் கிறுக்கர்கள், இசைவிழாவில் வந்து பாடி ஆடிக்களிக்க வேண்டுவது தேவைதானா என்னும் வினா, இராசீவ் காந்திக்கு உண்மையான அகக் கண்களைத் திறந்திருக்க வேண்டும்.

அதேபோல், இலங்கையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் மிகக் கொடுமையாகச் சாகடிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏதோ நன்மை செய்வது போல் வாயளவில் பேசிவிட்டுச் செயலில் மறைமுகமாகச் சிங்கள ஆட்சி வெறியன் செயவர்த்தனன் கையை வலுப்படுத்திக் கொண்டிருப்பதும், அதே பொழுதில், ஆப்பிரிக்க இனமக்களுக்காகவும், அராபிய