பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வேண்டும் விடுதலை

உழைக்கவும் தடையிருக்கக்கூடாது; உண்ணவும், தடையிருக்கக் கூடாது. மாந்தன் மலையை வெட்டிக் கடலில் போடலாம்; கடல் நீரை வயலுக்குப் பாய்ச்சிக் கொள்ளலாம். என்ன விரும்புகின்றானோ அதைப் படிக்கலாம்; எதை விரும்புகின்றனோ அதை எழுதலாம். எப்படி வாழ விரும்புகின்றானோ அப்படி வாழலாம். அதற்காகத் தன்போல் ஒருவன் அப்படிச் செய்வதை இவன் தடுக்கவும் கூடாது; இவன் விருப்பத்தை இன்னொருவன் தடுக்கவும் கூடாது. இந்த அமைப்பை இவனே ஒருவகையான கோணத்தில்-ஒரு பரிமாணத்தில் அமைத்துக்கொள்ள இவனுக்கு உரிமையிருக்க வேண்டும். இவ்வுரிமைக்கு எவன் தடையாக இருக்கின்றானோ அவன் இவனின்று மாறுபட்டவன். அவன் கோணம்பரிமாணம் எல்லாமே இவன் கோணத்திற்கும் பரிமாணத்திற்கும் மாறுபட்டன. இப்படி ஒருவனன்றி ஓரினமே இயங்குமானால் அவ்வினத்திற்குப் பிறிதோர் இனம் மாறுபட்ட இனம். அந்த இனமும் இந்த இனமும் தனித்தனி இயக்கம் உடையன. தொடக்கம் உடையன; முடிவு உடையன பயன் உடையன.

இவ்வாறு இன்றி உலக மாந்தரனைவரும் ஒரே யியக்கமும் ஒரே வகையான பரிமாணமும் உடையவராக நாம் கருதிக் கொள்வதைப் போன்ற அறியாமை வேறு இல்லை. இப்படி நான் கூறும் கருத்துப் புதிய உலக அமைப்புக்கு எள்ளளவும் மாறுபட்டதில்லை. இன்னுஞ் சொன்னால் அந்த அமைப்புக்குப் புதிய வடிவம் கொடுப்பது புதிய வலிவூட்டுவது வரப்போகும் பல புதிய சிக்கல்களை விடுவிப்பது. முதலில் ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் உலக மக்களினம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பண்பு, அமைப்பு இயக்கம், இயல்பூக்கம் முதலியன உண்டு என்றால் - அவற்றில் ஒவ்வோரினமும் பிறிதொன்றிற்கு வேறுபட்டுக் கிடக்கின்றது என்றால், ஒன்றையொன்று பகைத்துக்கொண்டுதான் கிடக்க வேண்டும் என்பதில்லை. எருமைகளும் மாடுகளும் ஒன்றையொன்று முட்டிக்கொண்டும் மோதிக் கொண்டுந்தான் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அவை வெவ்வேறு இனங்களே! இவ்வேறுபட்ட உணர்வை ஒன்றுபோல் கருதுவதென்பது வேறு; ஒன்றாக்கி விடுவதென்பது வேறு ஒன்று போல் கருதுவதென்பது அறிவால் நமக்குக் கிடைத்த பயன்; ஒன்றாக்கி விடுவதென்பது அறியாமையால் நாம் கண்ட இருள் துயரம் ! எந்த வகையான அறிவியல் உலகம் வந்தாலும் உலக மாந்தர் எல்லாரும் ஒரே வகையினர்; இனத்தினர் என்ற தன்மை வரவே வராது: அவரவர்களின் உறுப்புகளும் பிறவும் ஒன்றுப்பட்டே இருக்கும். உணர்வு வேறுபட்டுத்தான் இயங்கும். இந்த உண்ர்வு நிலைக் கொப்ப அறிவு கலக்கப் பெற்றதோர் இயக்கமே மாந்தரை வேறு