பக்கம்:வைணமும் தமிழும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

119


(1) ‘பச்சைமாமலைபோல்மேனி’, (2)'வேதநூல் பிராயம் நூறு”, (3) மொய்த்தவல் வினையுள் நின்று, (4) 'பெண்டிரால் சுகங்கள்’, (5) 'மறஞ்சுவர் மதில் எடுத்து’, (6) என்ற பாசுரங்கள் அனைத்திற்கும் 'அரங்கனார்க்கு ஆள் சேய்யாதே’ என்பது வரை அபிநயம் பிடிப்பார் அரையர் அரங்கனார்க்கு ஆள் செய்வதில் நம்பெருமாள் புறப்பாடு, திருஆராதனம், வேத விண்ணப்பம், அருளிப்பாடு உற்சவங்களையெல்லாம் அபிநயத்துக் காட்டி எஞ்சிய திருமாலைப் பாசுரங்கள் அனைத்தையும் சேவிப்பார். இன்றைய பாசுரத்தொகை 67.

ஆறாம் திருநாள் : இன்று தொடங்கப்பெறும் பாசுரம் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பின்' முதற்பாசுரம். இப்பாசுரத்திற்கு அரையர் அபிநயம் பிடித்து வியாக்கியானம் செய்தபின் இப்பதிகத்தின் எஞ்சிய பாசுரங்களையும் சேவிப்பார். அடுத்து திருமங்கையாழ்வாரின் 'பெரிய திருமொழி' தொடங்கும். தொடங்கும் பாசுரமாகிய 'வாடினேன் வாடி’ என்பதற்கே அபிநயமும் வியாக்கியானமும் உண்டு. அபிநயவியாக்கியானங்களுக்குப்பின் அரையர் பெரிய திருமொழியின் மூன்றாம் பத்து ஐந்தாம் திருமொழியாகிய 'வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்’ (3.5) என்ற பதிகம் முடிய 250 பாசுரங்களைச் சேவிப்பார். இவை திருப்பிரிதி, வதரி ஆச்சிரமம், சாளக் கிராமம், நைமிசாரண்யம், சிங்கவேள்குன்றம், திருவேங்கடம், திருஎவ்வுள், திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருக்கடல்மல்லை, திருஇடஎந்தை, அட்டபுயகரம், பரமேச்சுர விண்ணகரம், திருக்கோவலூர், திருஅயிந்திபுரம், திருசித்திரகூடம், காழிச் சீராமவிண்ணகரம் என்ற திவ்விய தேசங்களைப் பற்றியன.திருஆலியில்(3.5இன்றையபாசுரங்கள் அடைவுபெறும்.