பக்கம்:வைணமும் தமிழும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

வைணவமும் தமிழும்


மதுகுத்ணன் என்ற மூவரும் தோன்றுவர். பிரத்தியும்னரிடத்தி னின்று திரிவிக்கிரமன், வாமனன், சிரீதரன் ஆகிய மூவரும் பிரிந்து நிற்பர். அநிருத்தரிடத்தினின்று இருடிகேசன், பதுமநாபன், தாமோதரன் என்ற முவரும் பிரிவர்.இவர்களைப் பற்றிய குறிப்பு:திருவாய்மொழியில் பன்னிரு திருநாமப்பாட்டு’ ஒன்பதில் காணலாம். வேதாந்த தேசிகரும் பன்னிருதிருநாமம் என்ற தலைப்பில் ஒரு பிரபந்தம்’ அருளிச் செய்துள்ளார்.

(இ) விபவம் : இது அவதாரங்களைப் பற்றிக் கூறுவது. இவை ஆவேச அவதாரம்,முக்கிய அவதாரம் என்று இரு வகையாகப் பகுத்துப் பேசப்பெறும் ஆவேச அவதாரத்தைக் கெளணாவதாரம் என்றும் வழங்குவர். முக்கிய அவதாரம் சாட்சாத் அவதாரம் என்றும் கூறப்பெறும். -

(i) ஆவேச அவதாரம் : ஆவேச அவதாரத்தில் கபிலர், தத்தாத்ரேயர், பரசுராமன் போன்ற அவதாரங்கள் அடங்கும். இவற்றுள் ஆவேச அவதாரங்களில் அகங்காரத்துடன் கூடிய சீவர்களை ஈசுவரன் ஒரு காரியத்தின் பொருட்டு ஆவேச முகத்தால் அதிட்டித்து நிற்கையாலேஇவை புயூட்சுகளுக்கு” உபாசிக்கத் தக்கவையேயன்றி முமுட்சுகளுக்கு உபாசிக்கத் தக்கவை அல்ல. -

(ii) முக்கிய அவதாரம் : இதில் “ஆதிஅம்சோதியுருவை

அங்கு வைத்து இங்குப் பிறந்த” இராமர், கிருஷ்ணர், வாமன திரிவிக்கிரமர் முதலான மனித அவதாரங்களும்“மச்சம் கூர்மம்


11. திருவாய்-2.7

12. தே.பி. (286-292)

13. முமுச்சுகள்-மோட்சத்தில் விருப்பமுள்ளவர்கள் புயூட்சுகள்-உலகாயதர்

14. திருவாய் 3, 5:5


11. திருவாய்-2.7

12. தே.பி. (286-292)

13. முமுச்சுகள்-மோட்சத்தில் விருப்பமுள்ளவர்கள் புயூட்சுகள்-உலகாயதர்

14. திருவாய் 3, 5:5