பக்கம்:வைணமும் தமிழும்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நலம் அந்தம் இல்லதோர் நாடு

291


அறிவோம். அறிவியல் வளர்ந்துள்ள இக் காலத்தில் மின்விசையால் இயங்கும் சாதனத்தின் மூலம் விரைவாக மேலேறுகின்றோம். அங்ஙனமே, பரமபதம் என்னும் வீட்டுலகினை அடைவதற்குரிய ஒன்பது நிலைகளைப் படிகளாகக் கற்பித்து விளக்குவர். வேதாந்த தேசிகர் தமது ‘பரமபத சோபானம்’15 (சோபானம்-படி என்ற பிரபந்தத்தில், அவர் கூறும் படிகள்: (1) தத்துவங்கள் முதலியவற்றை வகுத்து - அறிதல் ; (2) மனம் தளர்தல்; (3) உலக இன்பத்தில் ஆசை அறுதல், (4)தம் தீவினைகளின் மிகுதியால் இனிவரக் கிடக்கும் நரக அநுபவம் முதலிய இடர்கட்கு அஞ்சுதல், (5) எம்பெருமான் வீடுபேற்றினை அருள்வதற்குக் காரணமான வழியைக் கடைபிடித்தல்; ( 6) இவ்வுடலினின்றும் ஆன்மா வெளியேறுதல் (7) ஆன்மா அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லுதல்; (8) வைகுந்தம் என்னும் திவ்விய உலகினை அடைதல், (9) அங்கு எல்லாம்வல்ல இறைவனைக் கண்ணாரக் கண்டு களித்து அநுபவித்து அந்தப் பேரின்பத்தில் மூழ்கிக் கிடத்தல் -

இந்தத் தத்துவங்கள் யாவும் இடைப்பிள்ளையாகி வந்த எம்பெருமானால் உரைக்கப் பெற்றவையேயாகும். இவற்றின் கருத்தை எம்பெருமானார்.இராமாநுசர் தமது மாபாடியத்தில் (ஸ்ரீபாஷ்யம்)? தெளிவாக்கியுள்ளார். இவற்றையெல்லாம் இராமாதுசருடைய திருமடைப்பள்ளியில் அந்தரங்கத்


5. வானேறும் வழிப்படிகள்: இவை தே.பி. 133- 153 பாசுரங்களில் விளக்கப் பெறுகின்றன.

6. யூரீபாஷ்யம்-பாதராயனரால் எழுதப் பெற்ற வேதாந்த சூத்திரத்திற்கு வரையப்பெற்ற உரை.