பட்டினத்துப் பிள்ளையார் தனிப்பாடல்
Appearance
தனிப்பாடல்
பக்கம் 75
***
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
- இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்
- நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந் தேடி
- நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
- பூப்பிளக்க எழுகின்ற புற்றீசல் போலப்
- புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
- காப்பதற்கும் வகையறியீர் கைவிடவு மாட்டீர்
- கவட்டுத்தொன் மரத்திடுக்கிற் கானுழைத்துக் கொண்டே
- ஆப்பதனைப் பிடித்தசைத்த பேய்க்குரங்கு போல
- அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே. (1)
- நல்லதைப் பற்றி அறியாத உயர்ந்த (ஏளனக் குறிப்பு) மனிதனிடம் நாடிப் போய் அவனைப்பற்றி நாக்கு பிளந்துபோகும்படி பொய்யைச் சொல்கிறீர்கள்
- பூமி பிளக்க எழுந்திருக்கின்ற கறையான் புற்றிலிருந்து 'பொல பொல' என எழுகின்ற ஈசல் போலப் பிள்ளைகளைப் பெறுகிறீர்கள். ஆனால் அவர்களைக் காப்பாற்றும் வழி உங்களுக்குத் தெரியவில்லை.
- தச்சன் அறுப்பதற்குப் பிளவில் வைத்திருக்கும் ஆப்பை அதன் பிளவில் தன் வாலை விட்டுக்கொண்டு பிடுங்கிய குரங்கு(வால் மாட்டிக்கொண்டு திண்டாடுவது போல) வாழ்க்கைப் பந்தத்தில் மாட்டிக்கொண்டு திண்டாடுகின்றீர்கள்.
- (இதற்கு யார் பொறுப்பு? நீங்கள்-தானே! )
- (பற்றிலிருந்து விடுபடுங்கள்)