உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

இளைஞர் வானொலி


பெற்றிருக்கும். சாடியினுள் வெள்ளீயத் தகடுகளை மேலும் கீழுமாகச் சாளரப்பலகைகளைப் போல வரிசையாக அடுக்கக் கூடுமாயின், அதற்கேற்றவாறு சாடியின் மின்சாரத்தைக் கொள்ளும் திறனும் மாறுபடும். சாடியினின்று வெளிப்படும் மின்பொறிகளும் உறைப்பிலும் அதிர்விலும் மாறுபடச் செய்யும். இவ்வாறு அந்த வெள்ளீயத் தகடுகளைச் சாடியின் பக்கங்களில் மேலும் கீழுமாக நகரச் செய்து மின்பொறிகளையும் மாறச் செய்தால், உண்மையில் நாம் என்ன செய்கின்றோம்? மின்பொறிகள் உண்டாக்கும் வானொலி அலைகளின் அதிர்வுகளை அல்லது அதிர்வு-எண்ணை மாற்றுகின்றோம்.

லெய்டன் சாடி என்பது ஒருவகை மின் தங்கி condenser) ஆகும். சாடியில் வைக்கப் பெற்றுள்ள தகடுகளில் ஏறும் மின்சாரத்தின் அளவை இரண்டு விதமாக அதிகப்படுத்தலாம். வெள்ளீயத் தகடுகளின் அளவை, அஃதாவது பரப்பை, அதிகப்படுத்தினால் அப்போது மின்சாரத்தின் அளவு மிகும். இரண்டு தகடுகளுக்கிடையேயுள்ள தூரத்தைக் குறைத்தாலும் மின்சாரத்தின் அளவு அதிகமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/68&oldid=1396253" இலிருந்து மீள்விக்கப்பட்டது