பக்கம்:இளைஞர் வானொலி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லெய்டன் சாடி

59


இதிலிருந்து வெளியிடப்பெறும் அலைகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். சாடியில் ஏராளமான மின்சாரம் இருக்குமானால், மின் பொறிகள் மிகத் தீவிரமாக இருக்கும்; ஆனால் அப் பொறிகள் முன்னும் பின்னுமாக மிகவேகமாகத் தாண்டிக் குறிப்பதில்லை. சாடியில் உள்ள மின்சாரம் மிகக் குறைந்திருக்குமாயின், மின்பொறிகள் வன்மையற்று இருக்கும்; ஆனால், அவை முன்னும் பின்னுமாக வேகமாகத் தாண்டிக் குதிக்கும். வெளிப்படும் அலைகளும் இதில் சேகரம் செய்யப் பெற்றுள்ள மின்சாரத்தின் அளவினைப் பொறுத்திருக்கும். இந்த அலைகளும்-வானொலி அலைகளைப் போலவே-உண்மையில் இடப்பரப்பில் நேர் - மின்சாரம், எதிர்-மின்சார ஆற்றல்களாக மாறிமாறிப் போய்க்கொண்டிருப்பவையே யாகும். இவையும் கடும்வேகத்தில் பிரயாணம் செய்து சுவர்கள், கதவுகள், மூடிய சாளரங்கள் போன்ற அனைத்தையும் ஊடுருவிச் செல்ல வல்லவை என்பதை நாம் நினைவிலிருத்த வேண்டும்.

லெய்டன் சாடி மின்சாரத்தை வைத்துக் கொண்டிருப்பதன் திறன் அதுகொண்டுள்ள வெள்ளீயத் தகட்டினைப் (tin foil) பொறுத்தது: வெள்ளீயத் தகடு அதிக மிருப்பின், அது மின்சாரத்தைக் கொள்ளும் திறனும் அதிகமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/67&oldid=1396252" இலிருந்து மீள்விக்கப்பட்டது