அய்யன் திருவள்ளுவர்
என்பதை ஒருவாறு உணர்கிறோம்.
மாமனிதர் மார்ட்டின் லூதர் கிங், நெஞ்சிருக்கும் வரை - நெஞ்சிலே நினைவிருக்கும் வரை - நினைவிலே நேர்மைக் கரு இருக்கின்ற வரை அவர் இருப்பார்.
மனிதாபிமானி கென்னடிக்காக ஒருமுறை அழுது புலம்பிய அமெரிக்கா, மார்ட்டின் லூதர் கிங்குக்காகவும் அழுது கண்ணிர் சிந்திக் கொண்டிருக்கிறது. இது காலத்தின் பரிணாமக் கோலம்.
"தீமையை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சியை இயேசுவிடமிருந்து கற்றேன்"
என்று மனம் திறந்து கூறிய மார்ட்டின் லூதர் கிங் என்ற அந்த அகிம்சை நிலா - அமெரிக்க 'வெள்ளுவா' மண்ணிலே சாய்ந்து, சாய்ந்து விட்டது.
மார்ட்டின் லூதர் கிங், நீக்ரோ மக்கள் உரிமைக்காக பதினான்கு முறை சிறை சென்றவர் - தியாகத்தின் வைரத்திற்கு வேறு என்ன வேண்டும் சான்று?
ஒருமுறை மார்பில் கத்திக்குத்துக் காயத்தை கிங் ஏந்தினார். மூன்றுமுறை - படுகாயங்களோடு தாக்கப் பட்டும் பிழைத்துக் கொண்டார்.
மார்டின் லூதர் கிங் குடியிருந்து வாழ்ந்த வீடு - கோயில், மூன்று முறை குண்டுகள் வீச்சுக்கு இலக்காகியது என்றால் - அவரது, இன, சமத்துவ, இயக்கம் அங்கே எப்படி வலிமையோடு வேரூன்றியிருந்தது என்பதையே உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றது!
அண்ணல் காந்தியடிகளின் அடியொற்றி நடந்து, அமெரிக்க நீக்ரோக்களுக்கு இன, சமத்துவம் கிடைக்கப் போராடிய இந்தச் சமாதானப் புறா, உலகின் தலை சிறந்த நோபல் பரிசையும் பெற்றது!
"எனது உயிர் போவதன் மூலம் - ஒரு நாட்டின் ஆன்மா காப்பாற்றப்படுமானால், மரணத்தைக் காட்டிலும் நான் விரும்புவது வேறொன்றுமில்லை என்று கூறிய அந்த மனிதாபிமானி கிங் மறைந்தார்!
சாகாப் புகழ் எய்திவிட்ட அந்தச் சரித்திர வீரனுக்கு இனமான
{{rh||88}