பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடையும் வழிகள் 109 எனக்கு உபாயம் தரும் இடத்தில் உனது திருவடி களையே உபாயமாகத் தந்தாய்; அவ்வாறு தந்த உனக்குக் கொடுப்பதற்குரிய பிரதியுபகாரம் நான் ஒன்றனையும் உடையேன் அ ல் ேல ன்; எ ன் னு ைட ய உயிரும் உன்னுடையதே, சேற்றை உடைத்தான கரும்பும் பெரிய செந்நெற் பயிர்களும் மிக்கிருக்கின்ற குளிர்ந்த சிரீவர மங்கை என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற வாசனை வீசுகின்ற பூக்கள் பொருந்திய குளிர்ந்த திருத்துழாயைத் த ரி த் த திருமுடியையுடையவனே! தெய்வங்கட்குத் தலைவனே! (10) (2) ஆரா அமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமருதல் : இஃது ஆரர் அமுதே' (5.8) என்னும் திருவாய் மொழியால் விளக்கப்படுகின்றது. வானமாமலை எம்பெருமானைச் சரணடைந்தும் அவன் முகம் காட்டவில்லை; திருக்குடந் தையில் தனக்குக் காட்சி தருவதாகத் திருவுள்ளம் கொண் டிருத்தல் கூடுமென்று எண்ணி திருக்குடந்தை சென்று ஆராவமுதன் சந்நிதியில் தளர்ந்து கிடந்து கூப்பிட்டு 'இன்னும் எத்தனை திருவாசல் தட்டித் திரியகடவேன்' என்னும் ஆர்த்தியோடு தலைக்கட்டுகின்றார். எம்மானே! தெவிட்டாத அமுதே! அடியேனது உடல், உன் விஷயத்தில் அன்பு தானே தனக்கு உருவமாகிப் பின்பு தண்ணிராகி ஒரு நிலையில் நில்லாமல் கரையும்படி உருக்கு கின்ற நெடுமாலே! சிறப்புப்பொருந்திய செந்நெற் பயிர்கள் சாமரையைப் போன்று வீசுகின்ற செழுமை பொருந்திய நீரையுடைய திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் அழகு பொருந்திய ஒப்பனை விளங்கும்படியாகச் சயனித் திருக்கின்றவனே! என் கண்களால் நின்னைக் கண்டு அநுபவிக்கப் பெற்றேன்.? - (l) 7. 'குளிர நோக்குதல், அணைத் தருளுதல் செய்யக் காண்கின்றிலேன்'...ஈடு.