அய்யன் திருவள்ளுவர்
தன்னலமற்றத் தன்மையில் நாள் பார்த்துத் திரும்பி விடுகிறார்கள்.
சூடு பிடித்த அரசியலைத் துவங்குவதற்குரிய அரசியல்வாதிகள் நம் நாட்டில் குப்பைகளாகக் குவிந்து கிடப்பதைக் காண்கிறோம்.
அந்த அரசியல் மீது அன்பைக் காட்டி, பண்பை வளர்க்கும் தலைவர்கள், அறிஞர்கள், விலை மதிப்பிலாச் சொல்லழகன் கவிஞர் வோர்ட்ஸ் வொர்த் கூறுவதைப் போல, மலையடிவாரத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்ட ஒரு பாராங்கல்லின் அருகிலே முளைக்கின்ற பூவாக - அந்தப் புனிதர்கள் இருப்பார்கள்.
அவர்களைப் பற்றிப் பாடிய கவிதைகள் - இன்னும் சாக வில்லை என்பதற்கேற்ப- ஒரு சிலர்தான் வருவார்கள் போவார்கள்.
காந்தியடிகளின் இந்தப் பண்பு, வெள்ளைக்காரனுக்கு பிற்காலத்தில் ஒரு பயங்கர அரசியலாக மாறும் என்று அவனுக்கு அன்று தெரியவில்லை.
அவர் இறந்த பிறகு, இந்த வெள்ளையனே விக்கி விக்கி அழும் அளவிற்குக் கண்ணீரை வரவழைக்கும் கதாநாயகனாகிவிட்டார் காந்தியடிகள்.
தலைவர்கள், தங்களது தொடக்கக் காலத்தை ஒரு கட்சியையோ - ஓர் இயக்கத்தையோ பற்றுக் கோடாகக் கொண்டே உழைக்கிறார்கள்.
இறுதிக் கட்டத்தில் அவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்ட தலைவர்களாக மாறி - தலை உள்ளவர்களுக்கு எல்லாம் ஆசி கூறுகிறார்கள். வாழ்த்துகிறார்கள்.
காந்தியடிகள், அந்தக் கட்டத்துக்கு தனது இறுதிக் காலத்தை ஒட்டிக் கொண்டு சென்றார்.
அவர் எண்ணிய சுதந்திர உணர்ச்சி - ஓயாமல் பாடுகின்ற வீணையாக இன்றுவரைக் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
சங்கீதத்தில் நம்பிக்கை உண்டானவன் - ஒப்பாரியையும், மடைப் புனலோசையையும், நல்ல கலைஞரின் இசையையும்