புலவர் என்.வி. கலைமணி
யானால், புழு பூச்சிகளைக் கொத்தித்தின்னும் பறவைகளைவிட - அவன் உயர்ந்தவன் என்பது உண்மையானால்,
தெய்வ லட்சணத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு - எனக்கே உரியது என்பது உண்மையானால்,
மனிதன் ஒரு கிளிஞ்சலைக்கூடத் தனது சொத்தாக உரிமை பாராட்ட முடியாது.
எவனுடைய விரல்களிலிருந்து எழுத்தாணி அசைந்தாலும் சரி, அவன் எழுதுகின்ற எழுத்து அவனது அடுக்களைக்குச் சொந்தமல்ல என்பதை - நீங்கள் உணர வேண்டும்.
அது, கட்டளையில்லாமல் வருகின்ற, காற்றில் கலக்க வேண்டிய பொதுச் சொத்தாகும்.
நேரிடையாகவே நான் கேட்கிறேன்.உங்களுடைய மதங்கள் கடவுளால் நேரிடையாகப் படைத்ததுதானே?
அதே கடவுளுடைய பொதுத் தன்மையில் ஒர் அனுகூட இருக்காதா மனிதனுக்கு?
ஆகவே, இங்கே ஆய்வுக்காக வந்திருக்கின்ற முப்பத்தெட்டுப் புலமையாளர்களையும் நான் தாள் பணிந்து கேட்கின்றேன்.
உங்களுடைய மதத்தைக் கடந்து, இனத்தைக் கடந்து-வெளி வருகின்ற ஆற்றல் படைத்த சிறகுகள், உங்களுக்கு முளைக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன்.
அப்படி முளைக்காவிட்டால், உங்களுடைய முட்டைகளை நீங்கள் சோதனையிடுங்கள். மனிதன் சரி பார்க்க முடியாத மிருகமல்ல. அத்தகையை நிலையிருந்தால், அவனைக் கடவுள் படைக்கவில்லை !
சிந்தனைகள் மிருகத்திற்கு இல்லாதபோது, மனிதனுக்கு மட்டும் இருக்கும்போது, உரிமைகள்- வேட்கைகள் இவற்றைத் தாண்டிச் சிந்திக்கின்ற அவனுக்கு, அந்த ஆற்றல் இல்லையென்றால், நீங்கள் வருத்தப்படக் கூடாது - அவனைக் கடவுள் படைக்கவில்லை.
திருக்குறள் என்பது - கையில் கிடைத்த பலகாரமல்ல, உங்களது விருப்பம் போல - பங்கீடு செய்து உண்பதற்கு.
155