பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 "உற்றாரை யான் வேண்டேன், ஊர்வேண்டேன், பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன், கற்பனவும் இனிஅமையும்; குற்றாலத்து அமர்ந்துஉறையும் கூத்தா, உன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துஉருக வேண்டுவனே என்று வேண்டிக் கொள்கிறார். மயில்வாகனனைச் சந்திக்காதவரையில் உண்மையிலேயே துன்பம் கொடுப்பன எல்லாம் இவனுக்கு இன்பமாக இருந்தன. அவனைச் சந்தித்தவுடன் உலக மாயை போய் விட்டது. எவற்றை மெய்யென்று முன்பு பாராட்டினானோ அவற்றைப் பொய் என்று நிந்திக்கிறான். நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் விலாசத்தை எழுதி வைத்துக் கொண்டிருந்தான். பெண்ணுக்கு வரன் தேடுவ தற்காக, பையனை மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக இவன் எத்தனையோ விலாசங்களைக் குறித்து வைத்துக் கொண்டிருந் தான். இப்போது எங்கே கோயில்கள் இருக்கின்றன. எங்கெங்கே இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்று நாடித் தலந்தலமாகச் சுற்ற ஆரம்பித்துவிட்டான். இறைவன் திருவருள் விலாசம் பெற்ற ஞானசம்பந்தப் பெருமான் எத்ததனை தலங்களுக்கு, ரோடு வசதி இல்லாத தலங்களுக்குச் சென்று, நல்ல கட்டிடம் இல்லாத இடங்களில் உறைந்திருக்கும் இறைவனை நாடி அந்தக் காலத்திலேயே ஒடியிருக்கிறார்! . பொய்யை நிந்திக்கிலேன் என்று வருந்தின பேர்வழி குருவின் அருட் பார்வையால் முரு கனைச் சந்திக்க ஆரம்பித்தவுடன் பொய்யை நிந்திக்க ஆரம்பித் தான். இவனைப் பொறுத்த அளவில் ஒன்று போய் விடுகிறது; பொய்யான பேச்சுப் போய்விடுகிறது; பொய்யான எண்ணம் போய்விடுகிறது; பொய்யான செயல் போய்விடுகிறது; பொய் யான எல்லாமே போய் விடுகின்றன. பொய்ப் பொருளைக் கண்டாலே அருவருப்பு உண்டாகிவிடுகிறது. அழுக்கு எப்போது தெரிகிறது? ஒளி இருக்கும்போது தெரிகிறது. அப்படியே மனத்திலே அஞ்ஞான இருள் சூழ்ந்திருக்கும்போது பொய்யான வாழ்க்கையை அருவருக்கத் தோன்றுவதில்லை. மயில்வாகனனைச் சிந்தித்து, சேவித்து, வந்தித்து, வாழ்த்தி, மனத்திலே சந்தித்து ஞானம் பிறக்கும்போது, ஊன் உருகி உள்ளொளி பெருகும்போது, பொய் தோன்றும், பொய்யை நிந்திக்கும் நிலை உண்டாகும். 26○