பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 குழியும் வழியும் எரிவாய்நரகக் குழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழியும் துயரும் பகரீ, பகரீ மறந்தவர்க்கே. 'எரிகின்ற தீ வாயை உடைய நரகக் குழியைப் பற்றிச் சொல்லுங்கள் என்கிறார். உயிரானது தான் பண்ணிய வினைக்கு ஏற்ப மீட்டும் கருக் குழியில் புகுந்து பலவிதமான உடம்புகளை எடுத்துத் துன்ப வேதனைக்கே ஆளாகும் என்ற நுட்பமான நிலையைச் சொல்ல, அதைப் பருப்பொருளாகக் காட்டி விளக்கு வது பெரியவர்கள் மரபு. பிறவியாகிய பெருந்துன்பத்தை அளிக்கிற நிலை எதுவோ, பாதை எதுவோ, அதை விளக்க வேண்டுமென் றால் அதே விதமான துன்பத்தைத் தருகிற பொருளை வைத்துச் சொன்னால்தான் உணர்ந்து கொள்ள முடியும். நெருப்பு என்ற உடனேயே அதனால் ஏற்படுகிற வெம்மையை எண்ணி அஞ்சுகிறோம். பாம்பு என்றவுடனேயே அதன் நஞ்சை எண்ணிப் பயப்படுகிறோம். மீட்டும் பிறவி எடுப்பதற்குரிய நிலையை, நரகம் என்று பெயர் வைத்துச் சொல்கிறார்கள். அது எப்படி இருக்கும்? கொழுந்து விட்டெரியும் நெருப்புக் குழியாக இருக் கும், கொடிய நஞ்சைக் கக்குகின்ற பாம்புக் குவியலாக இருக்கும் என்று சொன்னால் தீவினைகளால் உண்டான துன்பத்துக்கு அஞ்சுவார்கள்; தீவினை செய்ய அஞ்சுவார்கள். ஜியாமெட்ரியில் புள்ளியைக் காட்ட இரண்டு கோடு போட்டு வெட்டுவார்கள்; இரண்டு கோடும் சந்திக்கிற இடந்தான் புள்ளி என்று சொல்வார்கள். புள்ளிக்குத் தனியே பரப்பளவு இல்லை; அதைக் காட்ட முடியாது; ஆகையாலே அப்படிக் காட்டுவார்கள். இதை முன்பே ஒருமுறை சொல்லியிருக்கிறேன். இப்படி நுட்பமான பொருளைச் சொல்ல வேண்டுமானாலும் பருப்பொருளாகச் சொன்னால்தான் மனிதன் புரிந்து கொள்வான். நல்ல வினை செய்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும், பாவ வினைகளைச் செய்பவர்களுக்கு நரகம் கிடைக்கும் என்று அந்த அநுபவங்களைக் காட்சிகளாக்கிக் காட்டினார்கள். - மோட்சமாவது என்ன? மீட்டும் பிறவி உண்டாகாதநிலை. நரகம், மீட்டும் கருக்குழியிலே செல்லும் துன்பத்தை உண்டாக்கும் 162