பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அன்னக்கிளி

அமுதவல்லியம் அன்னக்கிளியும் பலகணிகளின் பின் மறைந்து தோப்பின் பக்கமே பார்வை பதித்து நின்றனர்.

நேரம் மிக மெதுவாய் ஊர்ந்ததாகத் தோன்றியது. இருள், உலகைக் கவியம் கருத்திரை என இறங்கிக் கொண்டிருந்தது. பொருள்களும் மரங்களும் கட்டிடங்களும் அதனதன் தனித் தன்மையை இழந்து மொத்தக் கருமையாய் மாறிவிடவில்லை இன்னும்.

'அதோ! அதோ!' என்றாள் அமுதவல்லி. அவள் சுட்டிய திக்கிலே, தோப்பில் மரங்களினூடே, ஒரு பெரிய மரத்தின் கீழே-குள்ளமாய்ப் பருமனாய், ஆடி அசையம் நடையுடைய ஓர் உருவம் சிறு மூட்டை ஒன்றை வைத்து விட்டு நின்றது, பிறகு திருப்பிப் பாராமலே அமுதவல்லியின் வீட்டை நோக்கி வந்தது.

உடனேயே வேறோர் உருவம்- 'இதுதான் நான் காலையிலும், நண்பகலிலும் பார்த்தது' என்று தலைவி சொன்னாள்-சிறிது உயரமாய், ஒல்லியாய்த் தோன்றியது. வெள்ளை ஆடையால் மூடி, முக்காடிட்டுக்கொண்டு வந்தது; மூட்டையை எடுத்து மறைத்தபடி தோப்பினுள் சென்று மறைந்து விட்டது.

‘பமாக இருக்கிறது. அம்மா!’ என்றாள் அன்னம்.

'என்னடி பயம்? இரண்டும் மனித உருவங்கள் தான். இவர்கள் யார் என்று நாளைக்கே நான் கண்டுபிடிக்காமல் விட்டுவிடுவேனா என்ன?' என்று உறுதி தொனிக்கும் குரலில் சொன்னாள் அமுதவல்லி.