98
கொள்ள முடியவில்லை. "என்னிடம் இப்போது உங்களுக்குக் கொடுக்க என்ன இருக்கிறது?’ என்று கேட்டார்.
புலவர் அதை வாயால் கூறவில்லை. கையால் குறிப்பித்தார்; அவர் இடையில் அணிந்திருந்த ஆடையைச் சுட்டிக் காட்டினர். வள்ளலுக்கு வியப்போ கோபமோ உண்டாகவில்லை. புன்முறுவல் பூத்தார். சிறிது யோசித்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். இடையில் இருந்த ஆடையையும் அவிழ்த்து அளித்துவிட்டுக் கோவணத்துடன் நின்றார்.
புலவர் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு போய் விட்டார். கோவணத்துடன் நின்ற வள்ளல், வழியில் அவ்வாறு நிற்கக் கூடாது என்று கருதி மறைவிடம் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தார். நல்ல வேளையாக அருகில் ஒரு குளம் இருந்தது. அங்கே விரைந்து சென்றார். குளத்துக்குள் இறங்கி இடுப்பளவு நீரில் நின்று கொண்டார்.
அங்கு இருந்தபடியே தம்மை அறிந்தவர் யாரேனும் அந்த வழியாக வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தார். புகழ்பெற்ற அவரை அறியாத மக்கள் அந்த வட்டாரத்தில் யார் இருக்கிறார்கள்? அந்த வழியே சென்ற ஒருவர் குளத்தில் நின்றுகொண்டிருந்த வள்ளலைப் பார்த்தார்.
"ஏன் இங்கே நிற்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"முதலில் உம்முடைய மேலாடையை இப்படி வீசும்’ என்றார் வல்லாளர். அவர் அப்படியே செய்ய அதை உடுத்துக்கொண்டு கரையேறினர். அதற்குள் வேறு இருவர் வந்துவிட்டார்கள். அவர்கள் தம் மேலாடைகளை வழங்கினர்கள். "ஏன் இப்படி இருக்க வேண்டும்? யாரேனும் வழிப்பறி செய்தார்களா? என்று கேட்டார்கள் அவர்கள். அவர் ஒருவாறு நிகழ்ந்ததை