பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி பக்தர்கள் 16t

பணத்தைச் சேமித்து அதைக் கொணர்ந்து இந்தியாவில் ஏழைகளுக்கு வழங்குகிருர்கள், வினோபா அடிகளைத் தரிசித்து அவருடன் சில நாள் இருந்து அவருடைய கல்லுரைகளைக் கேட்டு இன்புற்றுச் செல்கிருர்கள்.

இவர்கள் வெவ்வேறு வேலை செய்து வெவ்வேறு அளவில் ஊதியம் பெறுகிறவர்கள். ஆல்ை இவர்களுக்குள் வேறுபாடு இல்லை. நம் நாட்டில் உத்தியோகம் என்னும் ஏணியில் வெவ்வேறு படியில் இருப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் இணங்கி அன்பு செய்வது இல்லையே! இருநூறு ரூபாய் சம்பளம் வாங்கும் இருவர் அடுத்தடுத்துள்ள வீடு களில் வாழ்வார்கள். ஓரளவு பழகுவார்கள். அவர் களுடைய மனைவிமார்களும் பழகுவார்கள். ஒருவருக்கு இருபது ரூபாய் சம்பள ஏற்றம் கிடைக்கிறது. அப்போது அவர் எப்படி மற்றவரோடு பழகுவார் என்று பார்க்க வேண்டாம். அவர் மனேவி அடுத்த வீட்டுக்காரர் மனேவி யோடு தாராளமாக மனம்விட்டுப் பழகுவதை கிறுத்திக் கொள்வாள்! இந்தக் காந்தி பக்தர்களோ எந்த வேற்று மையும் இன்றி மனம் ஒன்றிப் பழகுகிருர்கள். குமாரி காதரின் எழுதித் தந்தது இது:

'அன்ருட வாழ்வில் எங்கள் இல்லம் ஒரு பெரிய குடும்பம் போன்றது. எங்கள் சுகதுக்கங்களே காங்கள் ஒவ்வொருவரும் பங்கிட்டு அநுபவிக்கிருேம்."

ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் காந்தியடி

களின் நெறியில் வாழும் மனிதர்களே, புனித உள்ளங்களே, அன்பு வடிவங்களேக் கண்டோம் அணுக்குண்டின் முழக்க மும் நாகரிகப் பொருட் குவியலினிடையே தம்மைப் புதைத்துக்கொண்டு வாழும் வாழ்க்கை ஆரவாரமும் உரத்த குரலில் காதைச் செவிடுபடுத்தும் சூழ்கிலேக்கு இடையே, இந்தக் காந்தி பக்தர்கள், சாந்திப் பித்தர்கள் வாழ்கிருர்கள்; இப்பொழுது கினைத்தால், காம் கண்டது கனவோ என்று எண்ணும் வகையில் இவர்கள் வாழ்கிருர்கள்.

கண்டறி-11