பக்கம்:இந்திய முதற் சட்டம் (நாடகம்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை அரசியல் விடுதலை பெற்ற இந்திய நாடு இன்னும் எத்தனையோ வகையில் விடுதலை பெற வேண்டியுள்ளது. அவற்றுள் இன்றி யமையாது உடன் வேண்டப் படுவது பொருளாதார விடுதலே. மக்கள் பொருளாதார ஏற்றத் தாழ்வு இன்றி வாழத் தொடங்கினர் களாயின், அன்று முதல் பிற ஏற்றத் தாழ்வுகளெல்லாம் தாமாகவே அகலும். - பொருளாதார விடுதலை விழையின், நாட்டின் உயிர்நாடி களாகிய கிராமங்களைத் தான் முதலில் காணவேண்டும். ஆண்டு முழுவதும் அல்லலில் பாடுபட்டு, நாட்டுக்குப் பயனளிக்கும் அந்த எழை விவசாயி முன்னேறினல்தான் உண்மையில் நாடு விடுதலே பெற்றதாகும். இக் கிராம முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டே இந் நாடகம் எழுதப்பட்டது. உரிமை ஆட்சி மலர்ந்த வேளையில்நம்மை நாமே ஆளும் சிலையில்-கம் கிராமங்கள் வளமும் வாழ்வும் பெறவேண்டும் என்ற கருத்தை வற்புறுத்தியே நாடகப் போக்கு அமைந்துள்ளது. அரசாங்கமும், தொண்டரும், நாட்டு மக்களும் ஒன்றிய கருத்தில் உழைப்பார்களானல் நாடு ஒரு சில ஆண்டு களில் பொருளாதாரம், சமூகம் ஆகிய எல்லாத் துறைகளிலும் முன்னேறி, மக்கள் வாழ்வு இன்பில் மலர வழி பிறக்கும் என்பதைக் காட்ட எழுந்ததே இந்நூல். இந்நூலுக்கு அணிந்துரை தந்து சிறப்பித்த சென்னை மாநிலப் பொதுப்பணி அமைச்சர் திரு. மீ. பக்தவத்சலம் அவர்களுக்கு என் நன்றியறிதலான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்நூலே அழகிய முறையில் பதிப்பித்து, வெளிக் கொணர்ந்த வசந்தம் பதிப்பகத்தார்க்கு என் வணக்கம். =9|- (Ipo Lie